நகைச்சுவை நடிகரும் சமூக சேவகருமான பத்மஸ்ரீ விவேக் அவர்களின் தாயார், சென்னையில் மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 86...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான விவேக், தனது நகைச்சுவை மூலம் சமூக பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்தார். இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பதால் இவரை சிலர்  ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞர்’ என்றும்  அழைக்கப்பட்டார்.


1990-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துணைநடிகராக தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்த இவர், தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.


இந்நிலையில் இன்று அவரது தாயார் உடல் நல குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் தாயார்  மணியம்மாள் விவேக்கின் சாலிகிராமம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று இரவு அவரது உடல்நிலை பலவீனமடைந்த நிலையில்  இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நாளை காலை அவரது சொந்த ஊரான சங்கரன்கோயில் , பெருங்கோட்டூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.