தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் சில நாட்கள் முன்னர் திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மரணம் திரை உலகினரையும் பொது மக்களையும் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசியை (Vaccine) செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். அடுத்த நாள் மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், அதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 17 அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.


தமிழ் சினிமா (Tamil Cinema) மற்றும் சமுதாயத்திற்கு நடிகர் விவேக் ஆற்றியுள்ள பங்களிப்பு மிகப்பெரியது. அவர் நம்மை சிரிக்க வைத்த தருணங்களை யாராலும் மறக்க முடியாது. அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் அவர் நகைச்சுவைக்காக வரையறையை மாற்றிக்கொண்டே இருந்தார். அதை மேலும் மெருகேற்றிக்கொண்டே இருந்தார். 


நடிகர் விவேக்கின் பல ரசிகர்களாலும், பல பிரபலங்கள் மற்றும் அவரது சகாக்களாலும் இன்னும் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களில் சிலர் படப்பிடிப்ப நேரங்களில் முன்னர் எடுக்கப்பட்ட நடிகர் விவேக்கின் படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இவற்றைக் காணும் போது நம்மை அறியாமல் நம் கண்களீல் கண்ணீர் வருகிறது. 


ALSO READ: நகைச்சுவை மாமேதைக்கு வந்த மாரடைப்பு: காரணம் என்ன? ஊகங்கள் உண்மையானதா?


இப்போது, நடிகர் சதீஷ் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார், இதில் நடிகர் விவேக் தனது சக நடிகர் ஒருவர் ஒரு வார்த்தையை உச்சரிக்க சிரமப்படும் வேளையில், அவருக்கு உச்சரிப்பதில் உதவுவதைக் காண முடிகிறது. நடிகர் சதீஷ் பகிர்ந்துள்ள இந்த த்ரோபேக் பி.டி.எஸ் வீடியோவைப் பார்க்கு அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிரிப்பும் அழுகையும் வருகிறது. இந்த அற்புதமான நடிகர் நம்மிடையே இன்று இல்லையே என்ற ஏக்கம் நமையும் பற்றிக்கொள்கிறது.



உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது மறுக்க முடியாத விஷயம்தான். ஆனால், சிலரது மரணங்கள் நம்மை நிலைகுலைய வைத்து விடுகின்றன. தனக்காக, தன் குடும்பத்துக்காக, தன் தொழிலுக்காக என்று மட்டும் வாழும் மக்களுக்கு இடையில், தன்னால் ஆன வகையில், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், சமூக நலனுக்காக சிந்தித்து செயல்பட்டவர்களில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு ஒரு முக்கிய பங்குண்டு.


தனது வாழ்வின் கடைசி தருணம் வரை சமூக சேவை செய்த சிந்தனையாளர் விவேக் (Actor Vivek). நேற்று முன்தினம் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற அவர், தடுப்பூசி செலுத்திகொண்ட பின்னர், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செய்தியாளர் சந்திப்பு வாயிலாக மக்கள் வரை தன் கருத்துக்களை எடுத்துச் சென்றார். தடுப்பூசி தொடர்பாக மக்கள் மனதில் உள்ள அச்சம் தீர்க்க, அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவேக், அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற பங்களிக்க வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


ALSO READ: விழிப்புணர்வு வித்தகன் விவேக்: சாகும் வரை சமூக சேவை செய்த சிந்தனையாளன்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR