புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், இன்று காலை மாரடைப்பு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்து வருகிறது.
முன்னதாக நேற்று நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் விவேக்கின் (Actor Vicek) தற்போதைய நிலையைப் பற்றி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு, கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ALSO READ: நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் விவேக்குடன் அவரது 6 நண்பர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதகவும் மருத்துவர்கள் கூறினர். அவரது தற்போதைய உடல்நிலைக்கு தடுப்பூசி காரணம் அல்ல என்பதையும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தினர்.
நடிகர் விவேகிற்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திகொண்டால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாது என்பதையும் மருத்துவர்கள் விளக்கினர். அடைப்பால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்துள்ளது. மயங்கிய நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரது நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட நடிகர் விவேக், மக்கள் அனைவரும் தாமதிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நடிகர் விவேக், “கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) குறித்து வதந்திகள் பொதுமக்களிடையே பரவி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்” என்று கூறினார்.
முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு. இதைச் செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று (Coronavirus) வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உண்டாகும் என்பதையும் நடிகர் விவேக் விளக்கினார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் விவேக் விரைவில் நலம் பெற்று வெளிவர அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ALSO READ: குழந்தைகளை குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR