நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. தமிழ், இந்தி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் விஜய்யின் முதல் பான் - இந்தியா ரிலீஸ் படம் எனும் சிறப்பையும் பெறவுள்ளது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளிலும் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. பல்வேறு புதிய சாதனைகளையும் பீஸ்ட் ட்ரெய்லர் படைத்துவருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பீஸ்ட் படத்தை வெளியிட அரசு தடை விதித்துள்ளதாம். உடனே நம்ம ஊரிலா என ஷாக் ஆகவேண்டாம். தடைவிதிக்கப்பட்டுள்ளது இங்கு இல்லை; குவைத்தில். ஆம், குவைத் அரசுதான் விஜய்யின் பீஸ்ட்டுக்குத் தற்போது தடைவிதித்துள்ளதாம். பயங்கரவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டும் விதமான காட்சிகள் கொண்ட படங்களுக்கு குவைத் அரசு தொடர்ந்து கடுமை காட்டிவருகிறது. எனவே அந்த அடிப்படையில்தான் பீஸ்ட் படத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.


                                                                 


மேலும் படிக்க ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?| 


விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான எப்.ஐ.ஆர் மற்றும் மலையாளத்தில் வெளியான குருப் போன்ற படங்களுக்கும் குவைத் அரசு முன்னதாக தடைவிதித்திருந்தது. பீஸ்ட் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதற்கு இந்தியாவில் U/A சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேலுள்ளோர் எவ்விதத் தடையும் இன்றி படத்தைக் காணலாம். ஆனால் 12 வயதுக்குக் குறைவானவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதல் படியே படத்தைக் காணமுடியும்.


                                                 


குவைத் அரசு பீஸ்ட் படத்துக்குத் தடை விதித்துள்ளதால் வேறு சில அரபு நாடுகளும் இதற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் அரபு நாடுகளிலிருந்து கிடைக்கும் திரைப்பட வசூல் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு எனும் காரணத்தால் பீஸ்ட் படத்துக்கு வியாபார ரீதியாக இதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | அஜித்தின் 3 மாத சாதனையை ஒரே நாளில் துவம்சம் செய்த விஜய்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR