சமீபத்தில் நடந்து முடிந்த 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வாங்கியவர் வில் ஸ்மித்.  விருது வாங்கியதைவிட இவரை பற்றி பிரபலமாக பேசப்பட்டது தொகுப்பாளரை மேடையில் அறைந்த சம்பவத்திற்கு தான்.  சில நாட்களாக இதுதான் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டு இருக்கிறது, இவர் செய்த செயல் வரவேற்கத்தக்கது என்று சில பிரிவும், இவர் செய்த செயல் கண்டிக்கத்தக்கது என்று சில பிரிவும் கூறி வருகிறது.  அறைந்த சில மணி நேரங்களிலேயே அவர் மன்னிப்பு கோரினாலும் சிலர் வில் ஸ்மித் செய்தது தவறு அவரது விருதை திரும்பப்பெற வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்நிலையில் இவர் அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | வில் ஸ்மித்தின் செயலால் பறிபோகிறது ஆஸ்கார் விருது?


பதவி விலகியது குறித்தும், தனது செயல் குறித்தும் வில் ஸ்மித் சில கருத்துக்களை கூறியுள்ளார்.  அவர் கூறுகையில், 94வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் நான் செய்த செயல் மிகவும் அதிர்ச்சியானதாகவும், வேதனை மிகுந்ததாகவும், ஒருபோதும் மன்னிக்க முடியாததாகவும் இருந்தது.  எனது இந்த செயலால் கிறிஸ் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் என பலரும் வேதனை அடைந்துள்ளனர்.  நான் அகாடெமியின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டேன்.   அகாடெமி எடுக்கும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன்.  



மேலும் அந்த விழாவில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விருதை பெற்ற வெற்றியாளர்கள் என அனைவரது கொண்டாட்டத்தையும் நான் முழுவதுமாக கெடுத்து விட்டேன், நான் செய்த செயலால் அவர்களின் மகிழ்ச்சியின் கெட்டுவிட்டது, அதை நினைத்து நான் மனமுடைந்து விட்டேன்.  அதனால் நான் அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | ஒரே ரோலிற்கு இரண்டு விருது! ஆஸ்கார் விருதில் நடந்த சுவாரசியம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR