கொரோனா தொற்றின் இரண்டாவது அலை (Corona Second Wave) மெல்ல மெல்ல குறைந்துகொண்டு வருகிறது. மிக அதிகமாக இருந்த ஒரு நாள் தொற்றின் அளவு தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் தொற்றின் அளவு மேலும் குறைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கொரோனாவை எதிர்க்க பொதுமக்களுக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போடப்பட்டு வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டால் அதன் பக்கவிளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மக்களிடையே இன்னமும் சற்று தயக்கம் இருந்து வருகிறது. 


ALSO READ | யோகி பாபு மாஸ் கிரிக்கெட் வீடியோ: பட்டையைக் கிளப்பும் யோகி பாபு, புகழ்ந்து தள்ளும் fans


இந்த தயக்கத்தை போக்கும் விதத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு (Yogi Babu), தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளார். 


 



 


நடிகர் யோகிபாபு கைவசம் விஜய்யின் தளபதி 65, அஜித்துடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் அயலான், டக்கர், பேய் மாமா, அரண்மனை 3 போன்ற படங்கள் உள்ளன. 


ALSO READ | Karthi gets COVID vaccination: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கார்த்தி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR