Aditi Rao Hydari Before And After Plastic Surgery Photos : இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர், அதிதி ராவ் ஹைதரி. மலையாள படங்கள் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இவர், பாலிவுட் பக்கம் சென்ற பிறகு மொத்தமாக இந்தி திரையுலகில் மட்டும்தான் நடித்து வருகிறார். 37 வயதாகும் இவர், பளபளக்கும் சருமத்துடன் மக்களை ஈர்த்து வருகிறார். ஆனால், இதற்கு பின்னால் ப்ளாஸ்டிக் சர்ஜரி நடந்தது என்பது பலருக்கு தெரியாது. அது குறித்து முழுதாக இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிதி ராவ்:


அதிதி ராவை ‘லீலா ஆப்ரகாமாக’ காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் மணிரத்னம். ஆனால், 2017ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அவருக்கு முதல் தமிழ் படம் இல்லை. இதற்கு முன்னரே, 2007ஆம் ஆண்டில் சிருங்காரம் எனும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறாததால் ரசிகர்களுக்கு இது குறித்து பெரிதும் தெரியவில்லை. 


ஹைதராபாத்தில் பிறந்த அதிதி ராவ், அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக அதிதியின் தாய்-தந்தை இருவரும் பிரிந்து விட்டனர். இளம் வயதிலிருந்தே பரத கலை பயின்ற அதிதி, அதை வைத்தே சினிமாவிற்குள்ளும் வந்தார். அதிதி, 2009ஆம் ஆண்டு சத்யதீப் மிஷ்ரா என்பவரைதிருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சில ஆண்டுகள் இலைத்ததை அடுத்து 2013ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்று கொண்டனர். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன பிரச்சனை நடந்தாலும் தொடர்ந்து சினிமாவை விட்டுக்கொடுக்காமல் நடித்து வந்த இவர், 37 வயதிலும் இன்னும் இளமை மாறாமல் இருக்கிறார். 


பிளாஸ்டிக் சர்ஜரி:


சில மாதங்களுக்கு முன்பு, ஹீராமண்டி என்ற இந்தி தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இதில் அதிதி ராவின் நடிப்பும் அவரது நடையழகும் வைரலானது. இதையடுத்து, அதிதியின் பழைய புகைப்படங்களும் வெளியாகின. இதைப்பார்த்த ரசிகர்கள், “நம்ம அதிதியா இது..” என அதிர்ந்து போய்விட்டனர். இது குறித்து பேசிய பல சமூக ஆர்வலர்கள் “இது போன்ற நடிகைகள் தாங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டோம்” என்பதை வெளியில் சொல்ல தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். ஆனால், இதற்கு அதிதி ராவின் தரப்பில் இருந்து மறுப்போ வெறுப்போ தெரிவிக்கப்படவில்லை. 



மேலும் படிக்க | காதலில் சித்தார்த்-அதிதி ராவ்? வைரலாகும் வீடியோ!


பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பிறகு அதிதியன் கண்கள் நிறம் மாறியிருப்பதையும், புருவம் அடர்த்தி ஆகி இருப்பதையும், கன்னங்கள் ஒட்டியிருப்பதையும் பார்க்க முடியும். இப்படி, நாயகிகளை திரையில் பார்த்து “நாமும் அது போல மாற வேண்டும்” என்று நினைக்கும் பெண்கள் இதன் பிறகாவது மாற வேண்டும் என்று பலர் கருத்துகளை கூறி வருகின்றனர். 


சித்தார்த்தின் மனைவியா? காதலியா? 


தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து தென்னிந்தியாவின் பெரிய ஹீரோக்களுள் ஒருவராக இருப்பவர் சித்தார்த். இவரும் அதிதி ராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள சித்தார்த் - அதிதி ஜோடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ