நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள சித்தார்த் - அதிதி ஜோடி!

Aditi Rao Hydari and Siddharth: பிரபல நடிகர்களான சித்தார்த் மற்றும் அதிதி ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

1 /5

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைடாரியும் தெலுங்கானாவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக நேற்று தகவல்கள் வெளியானது.  

2 /5

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகஸ்வாமி கோவிலில் அதிதி மற்றும் சித்தார்த் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.  

3 /5

இருப்பினும், வெளிப்படையாக சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தங்கள் திருமணத்தை பற்றி அறிவிக்கவில்லை. நீண்ட நாட்களாக இவர்கள் காதலித்து வருவதாக செய்திகள் வந்தாலும் அதிகார்வப்பூர்வமாக அவர்கள் அறிவிக்கவில்லை.  

4 /5

மகா சமுத்திரம் படப்பிடிப்பின் போது அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் இடையே காதல் உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  அப்போதிருந்து, அவர்கள் அடிக்கடி பல இடங்களுக்கு ஒன்றாக பயணம் செய்துள்ளனர்.    

5 /5

இந்நிலையில், தங்களது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக சித்தார்த் மற்றும் அதிதி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். திருமணம் என்று செய்திகள் வெளியான நிலையில், நிச்சயம் தான் முடிந்துள்ளது என்று இந்த ஜோடி அறிவித்துள்ளது.