நடிகை பாலியல் துன்புறுத்தல்... வீடியோவை பார்த்துவிட்டு டெலிட் செய்த நடிகர் திலீப்
நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் திலீப்புக்கு எதிரான பிடி இறுகியுள்ளது.
கேரளாவில் பிரபல நடிகை சில வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது.
இதனையடுத்து நடிகையின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6 முக்கிய குற்றவாளிகளையும், நடிகையின் கார் ஓட்டுநரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் சில காலத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தச் சூழலில் மலையாள இயக்குநர் பாலச்சந்திர குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வீடியோவை திலீப் பார்த்து ரசித்தார். அதுமட்டுமின்றி அந்த வீடியோ சில பிரபலங்களுக்கும் அனுப்பப்பட்டன. அவர்கள் யார் யார் என எனக்கு தெரியும்” என கூறியிருந்தார்.
பாலச்சந்திர குமாரின் இந்தப் பேட்டிக்கு பிறகு வழக்கானது மீண்டும் சூடுபிடித்தது. இந்தச் சூழலில் பாலச்சந்திர குமார் கூறியதை நிரூபிக்கும் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் கூறியுள்ளனர்.
மேலும்,மும்பையில் உள்ள தடயவியல் நிறுவனமான லேப் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, நீதிமன்றத்தில் திலீப் சமர்ப்பித்த 6 மொபைல் ஃபோன்களில் பல தரவுகளை அவர் அழித்ததும், அவரும் அவரது மைத்துனர் சூரஜும் பயன்படுத்திய ஃபோனில் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
வீடியோ ஆதாரங்கள் மட்டுமின்றி, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி திலீப்பின் வீட்டருகே சென்றதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுக்கும் இரண்டு படங்கள்!
6 ஃபோன்களில் அழிக்கப்பட்ட, ஈரானைச் சேந்த கோல்சன் என்பவர் செய்த வாட்ஸ் அப் உரையாடல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் திலீப்புக்கு எதிரான பிடி மேலும் இறுகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR