டைனோசர் என்றாலே குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சரி, குதூகலம்தான். நம் கற்பனைகளுக்கு எட்டாத இந்த டைனோசர் பற்றி எத்தனையோ கதைகளும், ஆய்வுகளும், தரவுகளும் உலகில் இந்த நிமிடம்வரை வந்துகொண்டே இருக்கின்றன. டைனோசர் குறித்தான நம் கற்பனைகளுக்கு தீனி போடும் வகையிலான துணுக்குகளும், கற்பனைக் கதைகளும், வரலாற்றின் அடிப்படையில் அவ்வப்போது கிடைக்கும் ஆதாரங்களும் சுவாரஸ்ய மூட்டக்கூடியவை. உண்மையில் டைனோசர் என்ற ஓர் இனம் பூமியில் வாழ்ந்ததா என்ற ஆராய்ச்சி மலையேறிப்போய் அந்த இனம் பூமியில் எப்படி அழிந்தது என்ற ஆராய்ச்சிதான் அறிவியலாளர்களின் ‘லாங் டெர்ம்’ கனவு. ஒவ்வொரு முறையில் ஒரு அறிவியல் ஆய்வுக்குழு புதுப்புது ஆய்வு முடிவுகளை உலகிற்கு அறிவிக்கும். காலப்போக்கில் உணவுச்சங்கிலி அறுபட்டு உணவுக்கு வழியின்றி டைனோசர்கள் அழிந்துவிட்டது என்ற ஒரு தரப்பு அறிவியலாளர்கள் கருதுகின்றனர். மற்றொரு தரப்போ, அண்டவெளியில் இருந்து விழுந்த விண்கற்கள் ஒன்று பூமியில் விழுந்து அதனால் ஏற்பட்ட மாபெரும் சுனாமி பேரலையில் டைனோசர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறது. இப்படி, டைனோசர்கள் அழிவுப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும், உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அது சாத்தியமும் இல்லை.!
மேலும் படிக்க | மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டைனோசர்!
முதலில் டைனோசர் எப்படியிருக்கும், எத்தனை வகை டைனோசர் உலகில் வாழ்ந்தன, அதன் உருவம் எந்த வடிவமைப்பில் இருக்கும், அது எப்படி நடந்துகொள்ளும் என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் 1993ம் ஆண்டு ‘தி ஜூராசிக் பார்க்’ சினிமா வெளிவந்தது. உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்ட அந்த படத்தை எழுதி இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அதுவரையிலான வெறும் கற்பனைகளிலும், படங்களிலும் பார்த்துவந்த நமக்கு விஷுவலாக டைனோசர்களை அருகில் இருந்து பார்த்தபடி உருவாக்கிய அந்த சினிமா உலகமே கொண்டாடித் தீர்த்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்த்த இந்தப் படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இருந்த நிலையில், ‘தி லாஸ்ட் வேர்ல்ட்: ஜூராசிக் பார்க்’ 1997ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தையும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கே இயக்கினார். முதல் பாகத்தைவிட இன்னும் நவீன வடிவல் வந்த டைனோசர்களை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கண்டுவியந்தனர். பின்னர், 2001ம் ஆண்டு ஜூராசிக் பார்க் மூன்றாம் பாகம் வெளிவந்து பாக்ஸ் ஆஃபீசில் முதலிடம் பிடித்தது. மூன்றாம் பாகத்தை ஜோ ஜான்ஸ்டன் இயக்கியிருந்தார்.
மேலும் படிக்க | இது கோழியா இல்லை டைனோசரா? இல்லை மயிலா?
இதன்பிறகு டைனோசர் ரக சினிமாக்கள் நீண்ட நாட்களுக்கு வெளியாகவில்லை. அத்துடன் 14 ஆண்டுகள் கழித்து ‘ஜூராசிக் வேர்ல்டு’ என்ற பெயரில் சினிமாக்கள் வரத்தொடங்கின. அந்த பெயரின் சீரிஸில் தற்போது புதிதாக உருவாகியுள்ள படம் ‘ஜூராஸிக் வேர்ல்டு: டொமினியன்’. காலின் ட்ரிவேரோ இயக்கத்தில் ஜூன் மாதம் 10ம் தேதி உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்கான டிரைய்லர் ரிலீஸாகி இப்போதே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. காரணம், என்னவென்றால் முதல்பாகத்தில் நடித்தவர்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதுதான். முதன்முதலாக வெளிவந்த ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் நடித்த சாம் நீல், ஜெஃப் கோல்ட்பிளம், லாரா டெர்ன் ஆகியோர் இந்த படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால் ரசிகர்களிடையே படத்தின் மீதான ‘பல்ஸ்’ எகிறியுள்ளது. மனிதர்களும், டைனோசர்களும் ஒன்றாக வாழ முடியாது என்ற கருவின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது ட்ரைய்லர் மூலம் தெரியவருகிறது. மேலும், மனிதர்களை அழிக்க நினைக்கும் டைனோசர்களுக்கும், உலக சமன்பாட்டுக்காக தன்னை அழிக்க நினைக்கும் டைனோசர்களை பாதுகாக்க நினைக்கும் சில மனித குழுவுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும், சிக்கல்களும் இந்தப் படத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி!
மற்றத் திரைப்படங்களில் இல்லாத மேலும் ஒரு கூடுதல் சுவாரஸ்யம் டொமினியனில் உண்டு. அது என்னவென்றால், காடுகளில் கண்டுகளித்த டைனோசர்களை, இந்தப் படத்தில் பனிமலை பிரதேசத்தில் உலவ விட்டு அசத்தியிருக்கிறார்கள்.! வெகுநாட்களாக டைனோசர் ரக படங்களுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பிரதேசத்தில் வாழக்கூடிய டைனோசர்களின் உறுமல்களைத் தியேட்டர்களில் கண்டுகளிக்க ‘கெட் ரெடி ஃபோக்ஸ்’.!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR