கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவின் (IFFK) 26வது பதிப்பில் நடிகை பாவனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். யாரும் எதிர்பார்க்காத விதமாக பாவனா அங்கு சென்றது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  அவரை "symbol of fight" என்று கேரள மாநில சலாசித்ரா அகாடமியின் தலைவரான திரைப்படத் தயாரிப்பாளர் ரஞ்சித் அறிமுகப்படுத்தினார்.   நடிகை பாவனாவும் அரங்கம் நிறைந்த கைத்தட்டலுடன் மேடைக்கு சென்றார். மோகன்லால், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்கள் கீழே அமர்ந்து இருந்த நிலையில் பாவனா மேடையில் அமர்ந்து இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ”நான் போராளி... பாதிக்கப்பட்டவள் அல்ல” விமர்சிப்பவர்களை துவம்சம் செய்த பாவனா!


ஏழு நாட்கள் நடைபெறும் இந்த கலாச்சார நிகழ்வில், பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 180 திரைப்படங்கள், 14 திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படும். 2005 ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலில் கால்களை இழந்த குர்திஷ் இளம் இயக்குனர் லிசா காலன் என்ற துருக்கிய திரைப்படத் தயாரிப்பாளருக்கு ஸ்பிரிட் ஆஃப் தி சினிமா விருது வழங்கி இவ்விழா கௌரவிக்கப்பட்டது. விழாவில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய பாவனா, "26வது IFFK-ன் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல திரைப்படங்களை உருவாக்குபவர்களுக்கும், நல்ல திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கும், எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக போராடும் லிசா போன்றவர்களுக்கும், எனது வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன்," என்று கூறினார்.  IFFK-ல் பாவனாவைப் பார்த்ததும் தங்களுக்கு "கூஸ்பம்ப்ஸ்" வந்ததாகக் ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.  ஐந்து வருடங்களுக்கு முன் கொடிச்சியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாவனா, அதன் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.  இந்நிலையில் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.  பாவனா கடைசியாக ‘பஜரங்கி 2’ என்ற கன்னட படத்தில் நடித்தார்.


மேலும் படிக்க | பச்சை குத்திய ரசிகருக்கு ஷாக் கொடுத்த சன்னிலியோன்.!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR