பச்சை குத்திய ரசிகருக்கு ஷாக் கொடுத்த சன்னிலியோன்.!

தன் பெயரை பச்சைக்குத்திய ரசிகரை பார்த்தவுடன் நெகிழ்ச்சியடைந்த சன்னிலியோன், ரசிகருக்கு கொடுத்த கியூட் மெசேஜ் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:39 AM IST
  • சன்னிலியோன் இன்ஸ்டாகிராம் வீடியோ
  • பெயரை கையில் பச்சைக் குத்திய ரசிகர்
  • விரைவில் திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தல்
 பச்சை குத்திய ரசிகருக்கு ஷாக் கொடுத்த சன்னிலியோன்.! title=

பாலிவுட் நடிகையான சன்னி லியோனுக்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். திரைப்படத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்த அவர், திடீரென தொழிலதிபர் டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கும் சன்னிலியோன் தம்பதி, வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள ஆண்ட்ரியா – மிரட்டல் லுக்

குழந்தைகள் வருகைக்குப் பின்னர் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது மீண்டும் சினிமாவில் படுபிஸியாக நடிக்கத் தொடங்கிவிட்டார். தமிழில் ஓஎம்ஜி என்ற படத்திலும், மலையாளத்தில் ஷீரோ என்ற படத்திலும் நடிக்கும் சன்னி லியோனின் வெப்சீரிஸ் ஒன்றும் அண்மையில் வெளியானது. பட புரோமோஷன் மற்றும் தன்னைப் பற்றிய அப்டேட்டுகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வரும் சன்னிலியோன், ரசிகர் ஒருவரின் செய்கையால் நெகிழ்ந்து போயுள்ளார்.

ஆம், தனது பெயரை கையில் பச்சைக் குத்திய இளைஞரை பார்த்த சன்னிலியோன், அந்த ரசிகரின் அன்பு தன்னை வியக்க வைப்பதாக கூறியுள்ளார். அந்த ரசிகருடன் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அவர் என்றென்றும் தன்னை காதலிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

மேலும், அந்த ரசிகர் நல்ல மனைவியை தேடி திருமணம் செய்து கொள்ள வேண்டும், அவருக்கு அதைத் தவிர இன்னொரு சாய்ஸ் இல்லை என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்த வீடியோவில் சன்னிலியோனின் தாவணிப் பாவாடை காஸ்டியூமும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | ரஜினி - நெல்சன் படத்தில் நானா? மறுப்பு தெரிவித்துள்ள முன்னணி நடிகை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News