Hansika Motwani Photos: தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த ஹன்சிகா திடீரென, பட வாய்ப்புகள் இல்லாமல் காணாமல்போனார். அல்லு அர்ஜூனுடன் தெலுங்கு படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், தமிழில் கிடைத்த வரவேற்பு அவரை புதிய உயரத்துக்கு அழைத்துச் சென்றது. விஜய், சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, பிஸியான நாயகியாகவும் வலம் வந்தார். உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மற்றும் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படங்கள் ஹன்சிகாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த படங்களாக அமைந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஆண்டவரின் அசாத்திய சம்பவம் ‘ஆளவந்தான்’ பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய 10 விஷயங்கள்!


சிம்பு மற்றும் கார்த்திக் ஆகியோரின் படங்களிலும் நடித்த ஹன்சிகா, திடீரென தமிழ் திரையுலகில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவருக்கான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தியதுடன், கவர் சாங்குகளை உருவாக்கினார். இதுவும் பெரிதாக கை கொடுக்காத நிலையில், வெப்சீரிஸில் களமிறங்கினார். தற்போது, நல்ல கதையம்சம் கொண்ட வெப்சீரீஸில் நடித்து வருகிறாராம். மற்ற நேரங்களில் ஹாட்டான போட்டோஷூட் நடத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.



அவ்வப்போது எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்வார். கடைசியாக அவர் பகிர்ந்த கவர்ச்சி படங்கள் இணையத்தில் வைரலாகின. அதேநேரத்தில் விமர்சனங்களையும் சந்தித்தது. பட வாய்ப்புகள் இல்லை என்பதற்காக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வாய்ப்புகளை ஈர்க்க பார்க்கிறார் என்று சிலர் விமர்ச்சித்தினர். இதனையெல்லாம் கண்டுகொள்ளாத ஹன்சிகா, சேலையில் ஸ்டைலிஷ்சாக புகைப்படங்களை எடுத்து இப்போது வெளியிட்டிருகிறார். இது ஸ்டைலிஷ்ஷாக இருந்தாலும், கவர்ச்சியிலும் களைகட்டுவதால் நெட்டிசன்களை லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.  


மேலும் படிக்க | சதாபிஷேகத்துக்கு விஜய் வராதது ஏன்? தந்தை ஏஸ்ஏசி ஓபன் டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR