சதாபிஷேகத்துக்கு விஜய் வராதது ஏன்? தந்தை ஏஸ்ஏசி ஓபன் டாக்

விஜய் தன்னுடைய சதாபிஷேகத்துக்கு வராதது ஏன்? என்பது குறித்து அவருடைய எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாக பேசியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 13, 2022, 03:13 PM IST
  • 80வது பிறந்தநாளைக் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர்
  • கலந்து கொள்ளாத மகன் தளபதி விஜய்
  • சூட்டிங்கில் இருந்ததாக சந்திரசேகர் விளக்கம்
சதாபிஷேகத்துக்கு விஜய் வராதது ஏன்? தந்தை ஏஸ்ஏசி ஓபன் டாக் title=

நடிகர் விஜய் மற்றும் அவருடைய தந்தை எஸ்ஏ.சந்திரசேகர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தொடங்கிய மனகசப்பு இன்று வரை சரியானதாக தெரியவில்லை. விஜய் மக்கள் இயக்கம் செயல்பாடுகள் மற்றும் அதன் பொறுப்பாளர்களையும் கடுமையாக விமர்சனம் செய்த சந்திரசேகர், விஜய் மீதும் கோபத்தில் இருக்கிறார். அவருடைய சில நடவடிக்கைகளை விரும்பாத விஜய், தந்தை எஸ்ஏ சந்திரசேகரை மக்கள் இயக்க செயல்பாடுகளில் மட்டுமல்லாது, தனிப்பட்ட ரீதியிலும் தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஆண்டவரின் அசாத்திய சம்பவம் ‘ஆளவந்தான்’ பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய 10 விஷயங்கள்!

அதற்கு வலுசேர்க்கும் விதமாக அண்மையில் தந்தை எஸ்ஏ. சந்திரசேகரின் 80வது பிறந்த நாள் விழாவில்கூட கலந்து கொள்ளவில்லை. எஸ்ஏ சந்திரசேகர் தன் மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். பின்னர், திருக்கடையூர் கோவிலுக்கு சென்று சதாபிஷேகம் செய்து சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது. இதனைப் பார்த்த நடிகர் விஜய் ரசிகர்கள்கூட படத்தில் மட்டுமே தாய் மற்றும் தந்தை பாசம் காட்டும் விஜய் நிஜத்தில் அப்படி நடந்து கொள்வதில்லை என விமர்சனம் செய்தனர்.

எவ்வளவு கோபம் இருந்தாலும், தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும் என்றெல்லாம் கூட இணையத்தில் நிறையபேர் பதிவிட்டனர். இந்நிலையில் இது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார். நடிகர் விஜய் தற்போது ஹைதராபாத்தில் பிஸியாக ஷூட்டிங் இருப்பதால் அவரால் நேரில் தன்னுடைய பிறந்தநாளுக்கு வரமுடியவில்லை எனத் கூறியுள்ளார். தந்தை மற்றும் மகனுக்கும் இடையே சில பர்சனல் விஷயங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் பொதுவில் கூற முடியாது. என்னுடைய பிறந்தநாள் விழா சிறப்பாக இருந்தது. காதலித்து கரம் பிடித்த மனைவி ஷோபாவுடன் மனம் நிறைவாக பிறந்தநாளைக் கொண்டாடினேன் எனத் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | பார்த்திபனின் இரவின் நிழல் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News