ஆண்டவரின் அசாத்திய சம்பவம் ‘ஆளவந்தான்’ பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய 10 விஷயங்கள்!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 13, 2022, 02:20 PM IST
  • கமல் நடித்த ஆளவந்தான் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது.
  • ஆளவந்தானை 3 டி முறையில் ரீ ரிலீஸ் செய்யத் திட்டம்
  • கமலின் கரியரில் முக்கியப் படங்களுள் ஒன்றாக ஆளவந்தான் உள்ளது.
ஆண்டவரின் அசாத்திய சம்பவம் ‘ஆளவந்தான்’ பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய 10 விஷயங்கள்! title=

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் திரைப்படம் புதுப்பொலிவுடன் 3டி டெக்னாலஜியில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி இப்படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆளவந்தான் படம் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

1. ஆளவந்தான் படத்தின் கதை,  1984ஆம் ஆண்டு கமல்ஹாசனால் எழுதப்பட்ட ‘தாயம்’ எனும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் அக்கதையை திரைக்கதையாக மாற்றிய கமல், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் அதனை ஒப்படைத்து ஆளவந்தானை இயக்கவைத்தார்.

2. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த இப்படத்தில் அதி நவீன டெக்னாலஜியாகக் கருதப்பட்ட motion control camera பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த டெக்னாலஜி முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட படம் ஆளவந்தான்தானாம்.

3. இப்படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட் மிகவும் பேசப்பட்ட ஒன்று. ஆஸ்திரேலிய கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ் ஃபார்முலாவில் எடுக்கப்பட்ட இப்படம், சிறந்த Special Effectsக்காக தேசிய விருதையும் பெற்று அசத்தியது.

4. இப்படத்தில் நந்து எனும் கதாபாத்திரத்துக்காக கமல்ஹாசன் நிர்வாணக் காட்சிகளிலும் நடித்திருந்தார். ஆனால் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டபோது அக்காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தில் அந்தக் காட்சிகள் இடம்பெறவில்லையாம்.

5. ரத்தம் தெறிக்கும் சில வன்முறைக் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதைத் திரையில் அப்படியே காட்டமுடியாது எனும் காரணத்தால், அக்காட்சிகளை லைவ்-ஆக்‌ஷன் அனிமேஷன் வெர்சனாக உருவாக்கியுள்ளனர். பலரையும் ஆச்சர்யப்படுத்திய இந்த அனிமேஷன் மேஜிக்கானது ஹாலிவுட் இயக்குநர் குவிண்டின் டோரண்டினோவையும் விட்டுவைக்கவில்லையாம். ஆம், அவர் எடுத்த கில்பில் படத்துக்கு ஆளவந்தானின் இந்த அனிமேசன்தான் இன்ஸ்பிரேஷனாம்.

6. கமல் இப்படத்தில் மேஜர் விஜயகுமார் எனும் ரோலிலும் நடித்திருந்தார். இதற்காக NDA சென்று crash course முடித்துள்ளார் கமல். சில ஆண்டுகள் பயிற்சி பெற்றுக் கற்றுக்கொள்ள வேண்டிய இதனை மூன்றே மாதங்களில் முடித்தாராம் கமல்.

7. இப்படத்தின் சுவாரஸ்யமான இன்னொரு விஷயம்- நடிகர் ஜெயம் ரவி. ஆம், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக ஜெயம் ரவி இப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

8. இப்படத்தின் கதாநாயகிகளாக ரவீனா டாண்டனும் மனிஷா கொய்ராலாவும் நடித்திருந்தனர். ஆனால் இப்படத்துக்கு முதலில் பேசப்பட்டவர்கள் இவர்கள் இல்லையாம். நடிகைகளான சிம்ரனும், ராணி முகர்ஜியும்தான் முதலில் இப்படத்தில் நடிப்பதாக இருந்ததாம். அதன் பின்னர்தான் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | இளையராஜா எம்.பி அறிவிப்புக்குப் பின் அவர் பற்றிய ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பதிவு!

 

9.வெளியான சமயத்தில் இப்படம் வியாபார ரீதியாக சரியாகப் போகவில்லை. ஆனால் கமலின் கரியரில் மிக முக்கியமான படங்களுள் ஒன்றாக இப்படம் உள்ளது. அமெரிக்காவில் ‘Fantastic Fest 2016’ன் போது ஆளவந்தான் திரையிடப்பட்டது. இப்படத்தைப் பார்த்த அமெரிக்க ரசிகர்களிடம் இப்படம் பெருவாரியான வரவேற்பைப் பெற்றது.

10. இப்படத்துக்கு ஷங்கர்-  ஏஷான் - லாய் கூட்டணி இசையமைத்திருந்தது. இந்தக் இசைக் கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் ஆளவந்தான் தான். இதே கூட்டணிதான் கமல் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் படத்துக்கும் இசையமைத்தது.

மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News