கேரளாவில் பிரபல நடிகை சில வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இதனையடுத்து நடிகையின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6 முக்கிய குற்றவாளிகளையும், நடிகையின் கார் ஓட்டுநரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் சில காலத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். 



இந்தச் சூழலில் நீதிமன்றத்தில் திலீப் சமர்ப்பித்த 6 மொபைல் ஃபோன்களில் பல தரவுகளை அவர் அழித்ததும், அவரும் அவரது மைத்துனர் சூரஜும் பயன்படுத்திய ஃபோனில் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இந்தச் சம்பவத்தில் நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


மேலும் படிக்க | நடிகை பாலியல் துன்புறுத்தல்... வீடியோவை பார்த்துவிட்டு டெலிட் செய்த நடிகர் திலீப்


அதனையடுத்து ஆலுவா போலீஸ் க்ளப்பில் காவ்யா மாதவன் நேற்று (திங்கள் கிழமை) நேரில் ஆஜராக வேண்டுமென காவல் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. மேலும் வெளிநாட்டிலிருந்து நேற்றுதான் சென்னை வந்ததாகவும் கொச்சி வந்த பிறகு ஆஜராவதாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தன்னை தன் வீட்டில் வைத்தே விசாரிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை வைத்தார். ஆனால், வீட்டில் வைத்து விசாரிக்க காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.



இந்நிலையில் ஆலுவா போலீஸ் க்ளப்பில் நாளை விசாரணை நடக்க இருப்பதால் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டுமென காவல் துறையினர் கூறியுள்ளனர். எனவே காவ்யா மாதவன் நாளை ஆஜராக இருப்பதால் இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | கோவை: மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - மெடிக்கல் ஷாப் ஓனர் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR