கோவை ரத்தினபுரி காவல் நிலைய பகுதிகளில் உள்ள மருந்துக்கடைகளில் சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் ரத்தினபுரி பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள மருந்தகங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, ஆம்னி பேருந்து நிலையம் அருகில் தனசேகரன் என்பவரது மருந்தகத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கியுள்ளனர். இதனை அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீஸார் கவனித்ததும் மருந்தகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக கொடுக்கப்படும் சுமார் 7 கிலோ எடையுள்ள 8400 வலி நிவாரணி மாத்திரிகளை அளவுக்கு அதிகமாக மருந்தகத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த மாத்திரைகளை கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைக்காக விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக கொடுக்கப்படும் இந்த மாத்திரைகளை உட்கொண்டால் வலி தெரியாமல் லேசான மயக்கத்துடன் கூடிய போதை ஏறியது போன்று இருக்கும்.
மேலும் படிக்க | மெடிக்கலில் போதை மாத்திரைகள் சப்ளை, சென்னையில் சிக்கிய கும்பல்
ஒன்றுக்கும் மேல் இந்த மாத்திரைகளை உட்கொண்டால் கூடுதல் போதை தரும் என கூறப்படுகிறது. 8 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை மருந்தகங்களில் ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கல்லூரி மாணவர்களிடம் ரூ.250-க்கு விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.
வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக உட்கொள்ளும் மாணவர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மருந்தக உரிமையாளரான தனசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 7 கிலோ எடையுள்ள மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஏற்கனவே ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் போலீசார் தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுபோன்ற போதை மாத்திரைகளால் இளைஞர் சமுதாயம் தவறான பாதையில் செல்லும் விஷயங்கள் காவல்துறையினருக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை: தலைச்சுற்ற வைக்கும் பகீர் பின்னணி!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR