பிரபல நடிகைக்கு ஆறு மாதம் சிறை தண்டனை-5 ஆயிரம் ரூபாய் அபராதம்! என்ன காரணம்..?
நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு, எழும்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பிரபல நடிகையும் எம்.பியுமான ஜெய பிரதாவிற்கு எழும்பூர் நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
ஜெய பிரதா:
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்கலீல் 70-90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர், ஜெய பிரதா. இவை மட்டுமன்றி கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்திய மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். கமல் ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்திருக்கிறார். இவர், 1994ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். 2004-2014ஆம் ஆண்டு வரை உத்தர பிரதேசம் ராம்பூர் பகுதிக்கு இவர் எம்.பியாக இருந்தார். இவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோருடன் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க | ஓடிடியில் வெளியானது ‘ஆதிபுருஷ்’ திரைப்படம்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?
குற்றச்சாட்டு:
ஜெயப்பிரதா, சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை.
இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது.
சிறை தண்டனை:
ஜெய பிரதாவின் இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றம் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்திவிடுவதாக தெரிவித்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ