கொளுத்தி போட்ட நடிகை கஸ்தூரி-ஒரே ஒரு வீடியோ பதிவால் பற்றி எரியும் ட்விட்டர்..!
சர்ச்சைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி மறுபடியும் பெண்கள் மது குடிப்பது பற்றி பேசி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
எப்போதுமே சோசியல் மீடியாவில் சர்ச்சைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி மறுபடியும் பெண்கள் மது குடிப்பது பற்றி பேசி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அது சோசியல் மீடியாக்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
90 கால கட்டங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் என்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் கஸ்தூரி. தற்போது சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது அரசியல் சமூகம் குறித்த கருத்துகளை பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக இவர் பதிவிடும் முக்கால்வாசி பதிவுகள் திமுக கட்சியை விமர்சிக்கும் வகையில் இருக்கும்
மேலும் படிக்க | பட வாய்ப்புக்காக பிரபல நடிகையை படுக்கறைக்கு அழைத்த இயக்குநர்..!
இந்த முறையும் அதே மாதிரியான ஒன்றை தான் செய்துள்ளார் கஸ்தூரி. இரண்டு இளம் பெண்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டிருக்கும் வீடியோவை பதிவிட்டு தண்ணி அடி பெண்ணே தண்ணியடி எட்டும் அறிவினிலே ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று தண்ணி அடி .. அப்போ மகளிர் உரிமைத்தொகை சிந்தாம சிதறாமல் அப்படியே திரும்பிவிடும் போல என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாக்களில் வைரலானதை அடுத்து பலரும் கஸ்தூரியை வறுத்தெடுத்து வருகின்றனர்
அந்த வகையில் மக்கள் நீதி மையத்தை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்துள்ளார் அதில் கஸ்தூரிக்கு ஒரு நியாயம் மற்ற பெண்களுக்கு ஒரு நியாயமா.. கஸ்தூரி பார்ல போயி மது அருந்தலாம். குடிக்கிறத இங்க நான் சப்போர்ட் பண்ணல. நீங்க அந்த வீடியோவ பத்தி இப்படி ஒரு கமெண்ட் கொடுத்து இருக்கீங்களே. அது அவங்க காசு அவங்க முடிவு அவங்க கல்லீரல் உங்களுக்கு என்ன பிரச்சனை என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள கஸதூரி நான் பார்லையும் பப்ளையும் மது அருந்துறேன் அப்டின்னு நீங்கள் சொல்லி இருக்கீங்க. இதற்காக உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இது தனிநபர் ஓட உரிமை அப்படின்னு நீங்கள் சொல்ல முடியும் ஆனால் உங்கள் பேச்சு சமூகத்தின் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது மேலும் நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் நிலைப்பாட்டையும் அது காண்பிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்
இந்த ட்விட்டர் சண்டை நீண்டு கொண்டே போக மக்கள் நீதி மையம் கட்சி பற்றி பேசியதும் கடுப்பான அந்த நிர்வாகி உங்கள் மீதுதான் சட்ட நடவடிக்கை பாயும் கைது கூட செய்யப்படலாம் நீங்கள் தான் பாமர இளம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ வை பதிவிட்டு இருக்கீங்க என காட்டமாக கூறியுள்ளார்.
கஸ்தூரியின் இந்த பதிவை பார்த்த சினிமா பிரபலங்களும் தாங்கள் எதிர்ப்பை காட்டமான பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் மூடர்கூடம் படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் நவீன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பணக்கார பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா அப்ப கெடாத சமூகமா இப்ப சாமானிய பெண்கள் மது அருந்த போது கெட்டுவிட்டது. மது நிச்சயமா உடல் நலத்துக்கு கேடு. ஆதிக்க உணர்வு சமூகத்துக்கு கேடு. பெண்ணாக இருந்து கொண்டு திராவிடியா என்று சொல்வதை நிறுத்துங்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்
ஏற்கனவே சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளை பரப்புபவர்கள் மீது வழக்குகள் பாயும் நிலையில் சமீபத்தில் கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு பரப்பிய கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார் அந்த வரிசையில் இப்போது கஸ்தூரியும் இதில் சிக்க போகிறாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ