சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடத்துள்ள படமான ‘ரகு தாத்தா’ ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மதுரை கோர்ட் யார்ட் விடுதியில் ரகு தாத்தா படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு படத்தின் ட்ரெய்லரை சிறுமிகளுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கீர்த்தி சுரேஷ், மதுரை எனக்கு ரொம்ப பிடித்த ஊர் மதுரை நான் அடிக்கடி வந்துசெல்லும் ஊர் மல்லிகை பூ மீனாட்சியம்மன் கோவில் என மதுரையில் எனக்கு ரொம்ப பிடிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Malavika Mohanan: மாளவிகா மோகனனுக்கு விரைவில் திருமணமா? உண்மை என்ன?



ரகு தாத்தா  படம்  அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படமாக இருக்கும், இப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும், பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி நகைச்சுவையாக இந்த படத்தில் சொல்லி இருப்போம். ஜாலியாக பாப்கார்ன் சாப்பிட்டுகொண்டே  பேமிலியோடு உட்கார்ந்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும் இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். பெண்ணியத்திற்காக போராடக்கூடிய கதாபாத்திரமாக நடித்திருப்பதால் 1970 ஆம் காலகட்டத்தில் இருந்த உள்ள பெண்களின் கதை, பெண்கள் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்படுகிறது. அது இன்றும் நடைபெற்று வருகிறது, அதனை ஆங்காங்கே சிறு சிறிய வசனங்களாகவும், காட்சிகளாகவும் படத்தில் இடம் பெற்றிருக்கும்.


இந்த படத்தை பார்க்கும் போது இதெல்லாம் பெண்கள் மீது  திணிக்க படக்கூடிய விஷயம் தானே ஆங்காங்கே தெரியும், காலம் காலமாக வந்தால் கலாச்சாரம் திடிரென வந்தால் திணிப்பா என்ற டயலாக் இருக்கும். கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன விஷயங்கள் திணிக்கப்படுவதை படத்தில் காட்டியிருப்போம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக்காது அது காமெடியாக சொல்லியிருப்போம் இது முழுவதும் காமெடி படம் தான். அரசியல் வருகை குறித்த கேள்விக்கு? இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை நடிப்பு மட்டும் தான். வருங்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பா? என்ற கேள்விக்கு? ஒருவேளை அரசியலில் வந்து விட்டால் அன்று நான் கூறியதை சொல்லிக் காட்டக்கூடாது என்பதற்காக நான் இல்லை என்றும் மறுத்து வருகிறேன், அரசியல் ஆசை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என பதிலளித்தார்.


இந்த படத்தில் ஹிந்தி திணிப்பை பேசுவதற்காக பெண்ணை ஹீரோயினாக காட்டியுள்ளோம், பெண்களை  பிரதானமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். இதனை ஒரு ஆண் நடிகர் நடித்திருந்தால் கதையை எடுத்துச் சென்று இருக்க முடியாது. இன்று வரை இப்படி ஒரு படத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள், இந்திய திணிப்பு என்பதை படமாக எடுத்திருக்க மாட்டார்கள். இந்த படத்தில் இந்தியை திணிக்க கூடாது என்பதை தான் சொல்லி இருப்போம் படம் பார்த்தீர்கள் என்றால் புரியும், பொண்ணுங்க என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என பெண்கள் மீது பல்வேறு திணிப்புகள் செலுத்தப்படுகிறது. கேஜிஎஃப், காந்தாரா எடுத்த தயாரிப்பு நிறுவனம் தமிழில் முதல் முதலில் எடுக்க வேண்டுமென்றால்  சில விஷயங்களை யோசித்து இருப்பார்கள். அப்படி தான் ஹிந்தி திணிப்பை ரொம்ப காமெடியாக விசுவலில் கொண்டு வந்திருக்கும்.


மேலும் படிக்க | தங்கலான் டிரைலருக்கு ரசிகர்களின் ரியாக்ஷன்! “நேஷனல் அவார்டு எடுத்து வைங்க டா..”


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ