தங்கலான் டிரைலருக்கு ரசிகர்களின் ரியாக்ஷன்! “நேஷனல் அவார்டு எடுத்து வைங்க டா..”

Thangalaan Movie Trailer : விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் டிரைலர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ரியாக்ஷன் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 10, 2024, 06:48 PM IST
  • விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம்
  • டிரைலர் ரிலீஸ்
  • ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?
தங்கலான் டிரைலருக்கு ரசிகர்களின் ரியாக்ஷன்! “நேஷனல் அவார்டு எடுத்து வைங்க டா..” title=

Thangalaan Movie Trailer : பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தங்கலான். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்வது போன்ற இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

தங்கலான் திரைப்படம்:

தங்கலான் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. படம், வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, சம்பத் ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பிரிட்டீஷ் அரசாங்கத்தின் பாேது, தங்க சுரங்கத்தை வைத்தும், அங்கு நடந்த நிகழ்வுகளை வைத்தும் எடுக்கப்பட்டிருக்கிறது தங்கலான் திரைப்படம். 

தங்கலான் படத்தின் டிரைலர்!

தங்கலான் படத்தின் டிரைலரில் பிரிட்டீஷ் அரசாங்கத்தில் இருந்து ஒருவர் தங்கம் எடுக்க வருவது போலவும், அதற்கு விக்ரம் தலைமை தாங்கும் கூட்டம் உதவுவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் விக்ரமுடன் சில காட்சிகளில் இடம் பெற்றிருக்கின்றனர். கிராஃபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

ஆஸ்கர் அவார்டு..

தங்கலான் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர் ஒருவர், படத்திற்கு ஒரு நேஷனல் அவார்டை எடுத்து வைக்குமாறு தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தின் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், கலர் கிரேடிங் நன்றாக இருப்பதாகவும் அந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.

வெளிநாட்டு தரம்:

 

ஒரு ரசிகர், தங்கலான் படம் வெளிநாட்டு தரத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | தங்கலான் படத்தின் டீசர் வெளியானது!

ஜிவி பிரகாஷ் குமாருக்கு பாராட்டுகள்:

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்தான் ‘தங்கலான்’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தேசிய விருது வாங்கும் தரத்தில் மியூசிக் இருப்பதாக ஒரு ரசிகர் கூறியிருக்கிறார்.

ஜிவி, முன்னரே “சம்பவம் இருக்கு” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மெர்சலாக மிரட்டும் தங்கலான் விக்ரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News