எனக்கு பாய் பிரண்டாக வர வேண்டுமென்றால்... மிர்னாளினி ரவி கொடுத்த விளக்கம்!
சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட நடிகை மிர்னாளினி ரவி மாணவிகளுடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்.
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மிர்னாளினி ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நடிகை மிர்னாளினி ரவி அவர்களிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டனர், அப்பொழுது அவர்
நடிகர் விஜய், அஜித் இருவருமே பிடிக்கும், நடிகர் விஜய் அவர்களின் நடனம் பிடிக்கும், நடிகர் அஜித் அவர்களின் ஸ்டைல் பிடிக்கும் என்றார்.
மேலும் படிக்க | என்னா மனுஷன்பா..!விவசாயத்தில் அசத்தும் ’பொல்லாதவன்’ கிஷோர்!
வாழ்க்கையில் எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்க வேண்டு வேண்டும். எனக்கு பிடித்த உணவு பிரியாணி என்றார், எனக்கு பாய் பிரண்டாக இருக்க வேண்டும் என்றால் இந்த தகுதி இருந்தால் போதும் மனம் திறந்து கூறிய நடிகை என்னை எப்பொழுதும் சிரிக்க வைக்க வேண்டும். சந்தோசமாக பார்த்துக் கொண்டால் போதும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் நடித்த எனிமி திரைப்பட டும் டும் பாடலுக்கு கல்லூரி மாணவிகளுடன் குதூகலமாய் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார். நடிகையின் நடனத்தை கண்ட மாணவர்கள் விசில் பறக்க ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து செல்பி எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது, இதனை எடுத்து அந்த பகுதியில் இருந்து அவசர அவசரமாக நடிகை புறப்பட்டு சென்றார். மிர்னாளினி ரவி தமிழில் எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க | சூர்யா - ஜோதிகா மும்பையில் வாங்கிய புதிய சொகுசு வீடு..! பாலிவுட் என்டிரிக்கு பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ