விஜய்யை பின்தொடரும் சிவகார்த்திகேயன்! இந்த விசயத்திலுமா?

விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீர் பகுதியில் நிறைவடைந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பும் காஷ்மீர் பகுதியில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 25, 2023, 09:17 AM IST
  • கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் எஸ்கே21 படத்தில் நடிக்கப்போகிறார்.
  • 'எஸ்கே21' படம் இந்திய ராணுவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.
  • 'எஸ்கே21' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
விஜய்யை பின்தொடரும் சிவகார்த்திகேயன்! இந்த விசயத்திலுமா?  title=

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று பின்னர் தனது திறமையால் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி, திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன்.  'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் பிஸியான நடிகராக மாறிவிட்டார், சமீபத்தில் இவரது நடிப்பில் 'டான்' மற்றும் 'பிரின்ஸ்' போன்ற படங்கள் வெளியானது.  தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'மாவீரன்' எனும் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.  சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, மிஷ்கின் மற்றும் சுனில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | என்னா மனுஷன்பா..!விவசாயத்தில் அசத்தும் ’பொல்லாதவன்’ கிஷோர்!

'மாவீரன்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் 'எஸ்கே21' படத்தில் நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்திலோ அல்லது மே மாதத்திலோ தொடங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.  இப்படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். 'எஸ்கே21' படம் இந்திய ராணுவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட இருப்பதால் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினர் காஷ்மீர் பகுதிக்கு சென்று படப்பிடிப்புக்கான  இடத்தை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பும் கடந்த இரண்டு மாதங்களாக காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்தது, சில நாட்களுக்கு முன்னர் தான் படக்குழு வீடு திரும்பியுள்ளது.

இந்நிலையில் 'எஸ்கே21' படக்குழுவினரும் படப்பிடிப்புக்கு காஷ்மீர் பகுதியினை தேர்வு செய்திருப்பதால் அவர்களுக்கு லியோ படக்குழு பல உதவிகரமான குறிப்புகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உதாரணமாக காஷ்மீர் பகுதியின் காலநிலை மாற்றங்கள், எந்த பகுதிகள் படப்பிடிப்புக்கு ஏற்றதாக இருக்கும் போன்ற பல விஷயங்களை 'லியோ' படக்குழு 'எஸ்கே21' படக்குழுவினருக்கு தெரிவிக்கக்கூடும்.  இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், மேலும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு படத்தில் நடிக்கப்போகும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஆஸ்கார் வென்ற நாட்டு நாட்டுப் பாடலைப் பாடியவர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News