நடிகை மிருணாள் தாகூரின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு விவரம்: தென்னிந்தியாவின் டாப் இளம் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூரின் சம்பளமும், மார்க்கெட்டும் எகிறியுள்ளது. அதன்படி தற்போது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஹாய் நான்னா படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை மிருணாள் தாகூர்:
நடிகை மிருணாள் தாகூர் (Actress Mrunal Thakur) ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் துல்கர் சலமான் நடிப்பில் தமிழ்,தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். எந்த திரைப்படமும் அவருக்கு பெற்றுதராத வரவேற்பை சீதா ராமம் பெற்று தந்தது. சீதா ராமம் படத்திற்கு பிறகு  மிருணாள் தாகூர் பான் இந்தியா ரசிகர்களை பெற்றார். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் 'பேமிலி ஸ்டார்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் வெளியான ’ஹாய் நானா’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார், இதில் இவர் நானியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியானது. மேலும் ஹாய் நான்னா படத்திற்கு ரசிகர்களை கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இவர் தற்போது ஹிந்தியிலும் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் ஆர்வம் காட்சி வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் தான் Made in Heaven 2 எனும் வெப் தொடரில் நடித்திருந்தார்.


மேலும் படிக்க | தலைவர் 171 படம் இப்படி தான் இருக்கும் - லோகேஷ் கனகராஜ் கூறிய பதில்!


நடிகை மிருணாள் தாகூர் சம்பளம்:
இந்நிலையில் தற்போது தென்னிந்தியாவின் டாப் இளம் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர் (Mrunal Thakur Salary) ஹாய் நானா படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மிருணாள் ஹாய் நானா படத்தில் நடிப்பதற்காக சுமார் 3 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை இளம் நடிகை மிருணாள் தாக்கூர் வாங்கியுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


நடிகை மிருணாள் சொத்து மதிப்பு:
குறுகிய காலத்திலேயே புகழ் உச்சிக்கு சென்ற மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவுள்ளது. அதில் இவரின் சொத்து மதிப்பு ரூ.,33 கோடி மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இவரிடம் 30 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும், 45 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா அக்கார்டும் உள்ளதாம். அதுமட்டுமின்றி நடிகை சமீபத்தில் 2.17 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் சொகுசு காரையும் வாங்கினார். மேலும் மிருணால் சில ஆடம்பர ஹேண்ட் பேக்களையும் வைத்துள்ளார். 


ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த ஹேண்ட் பேக் உட்பட பல ஆடம்பர டிசைனர் ஹேண்ட் பேக்களை அவர் வைத்துள்ளார். மேலும் ரூ.1.27 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு பிராண்டின் லெதர் ஸ்லிங் பேக்கும் வைத்திருக்கிறார். 


மேலும் படிக்க | சரிகமபா Li'l Champs டைட்டில் ஜெயித்த கில்மிஷாவின் பரிசு தொகை இவ்வளவா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ