சரிகமபா Li'l Champs டைட்டில் ஜெயித்த கில்மிஷாவின் பரிசு தொகை இவ்வளவா?

Sa Re Ga Ma Pa Little Champs Title Winner Kilmisha: சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த இலங்கை பெண் கில்மிஷாவுக்கு எவ்வளவு பரிசு தொகை வழங்கப்பட்டது என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 18, 2023, 02:23 PM IST
  • சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி.
  • சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த இலங்கை பெண்.
  • டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை இத்தனை லட்சமா?
சரிகமபா Li'l Champs டைட்டில் ஜெயித்த கில்மிஷாவின் பரிசு தொகை இவ்வளவா? title=

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்: சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டதை சென்றிருக்கும் இலங்கை பெண் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதில் டைட்டில் ஜெயித்த இலங்கை பெண் கில்மிஷாவுக்கு எவ்வளவு பரிசு தொகை வழங்கப்பட்டது என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி:
தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சிங்கிங்ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி. குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது. சரிகமப சீசன் 3 (சீனியர்ஸ் ) நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, லிட்டில் சேம்ப்ஸ், சீசன் 3 மொத்தம் 28,போட்டியாளர்களுடன்,தொடங்கப்பட்டது. இதில் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய்பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | சக்தியை பழிவாங்க ரங்கநாயகி செய்யும் சூழ்ச்சி! மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் தொகுப்பாளராக ஆறாவது முறையாக அர்ச்சனா சந்தோக் கலக்கினார் என்றே கூற வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடைபெற்று வந்த நிலையில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட்டை நடத்தி குழந்தைகளின் திறமையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நேற்று முடிவடைந்து இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டிருந்தார். மேலும் இதில் இறுதி கட்டத்தில் ரிஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்தேஷ், ரிஷாந்த் கவின் மற்றும் கனிஷ்கர் என ஆறு பேர் ஃபைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த இலங்கை பெண்:
இந்நிலையில் தற்போது நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் பைனஸில் எல்லோரும் எதிர்பார்த்தது போல இலங்கை பெண் கில்மிஷா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். ஒரு இலங்கை பெண் இங்கு வந்து டைட்டில் வெல்வது வரலாறு என மேடையில் இருந்த நடுவர்கள் கூறினார்கள். இவருடைய இயற்கையான குரல் வளத்தை கேட்டு மெய் மறக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம்.

அவருடைய பாடும் திறமை பலராலும் வியக்கப்பட்டு வருகிறது. இந்த மேடையில் தன்னுடைய தாய் மாமா மற்றும் தங்கள் நாட்டில் போரில் இறந்தவர்களை பற்றி பேசி பலரையும் ஆரம்பத்திலேயே கில்மிஷா கண்கலங்க வைத்திருந்தார். மேலும் டைட்டில் வென்ற கில்மிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன் மண்ணுக்கு சமர்பிப்பதோடு ஈழத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளார்.

அதாவது அவருடைய பதிவில் "எம் மண்ணுக்கும் மண்ணுக்கு உயிர் துறத்த என் மறவர்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்... எனக்கு இத்தனை அன்பும் ஆதரவும் தந்த உங்கள் அனைவருக்கும் உங்கள் பிள்ளையாய் என்றும் நான்.. என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை இத்தனை லட்சமா:
இந்நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற கில்மிசாவுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. இவரை அடுத்து இரண்டாவது இடத்தை ருத்ரேஷ் பிடித்திருக்கிறார். பின் மூன்றாம் இடத்தை சஞ்சனா பிடித்திருந்தார். இவர்கள் இருவருக்குமே 2 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் நான்காம் இடத்தை பிடித்த ரிக்ஷிதாவுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள ஹோம் மேக்ஓவர் கிப்ட் ஆக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சீதா ராமன்: கர்ப்பமான சீதா.. மகாவுக்கு பேரதிர்ச்சி கொடுத்த மந்திரவாதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News