லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களையும், தனிப்பட்ட விமர்சனத்தையும் சந்தித்தவர் அவர். இருந்தாலும் மனம் தளராத அவர் தொடர் உழைப்பின் காரணமாக தமிழில் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில், அஷ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சத்யராஜ், வினய் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ப்ரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.


இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நயன். அப்போது அவரை பிரபல தொகுப்பாளின் டிடி என்கிற திவ்யதர்ஷினி பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியில் பேசிய நயன், “பெண்களுக்கு திருமணம் என்பது இன்டர்வெல் கிடையாது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும் என்கிற எந்தவொரு கட்டாயமும் இல்லை. 



திருமணம் ஒரு மகிழ்ச்சியான ஃபீலிங் அவ்வளவுதான். அதன் காரணமாக பெண்கள் செய்துகொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.


தமிழ் சினிமாவில் அந்த காலக்கட்டத்தில் கதாநாயகிகளுக்கு  முக்கியத்துவம் குறைவாகவே இருந்தது. அப்போது எல்லாம் படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் ஏதேனும் விழாவிலும் கதாநாயகிகளுக்கு ஒரு ஓரமாகவே இடம் கிடைக்கும். அந்த காரணத்திற்காகவே விழாக்களில் எதுவும் பங்கேற்பதை தவிர்த்திருந்தேன். அதை மாற்றவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் (உமென் சென்டரிக்) படங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன்.


 


ஆரம்பத்தில் பேய் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. சின்ன வயசுல யாரோ சொன்னதை கேட்டுட்டு அதன் பின்னர் மல்லாக்க படுக்கவே மாட்டேன், ஒன் சைடாக கை வச்சுத்தான் தூங்குவேன். நேரா படுத்தா யாராவது நம் மேல வந்து அப்படியே இறங்கிடுவாங்களாம் என்று கூறினார்கள். தூங்கும்போது எப்பவுமே லைட் ஆஃப் பண்ணாமதான் படுப்பேன்” என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | பாபா ரீ ரிலீஸுக்கு இதுவா காரணம்?.. இணையத்தை அதிரவைக்கும் தகவல்


மேலும் படிக்க | வாரிசு ஆடியோ ரிலீஸ்; அஜித் செய்யப்போகும் சம்பவம் என்ன தெரியுமா?


மேலும் படிக்க | முழு வீச்சில் தயாராகும் வாரிசு இசை வெளீயீட்டு விழா! சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ