வாரிசு ஆடியோ ரிலீஸ்; அஜித் செய்யப்போகும் சம்பவம் என்ன தெரியுமா?

வாரிசு ஆடியோ ரிலீஸ் அன்று துணிவு டீம் செய்யப்போகும் சம்பவம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 21, 2022, 03:21 PM IST
  • துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் சமீபத்தில் வெளியானது
  • வாரிசு ஆடியோ ரிலீச் நிகழ்ச்சி விரைவில் நடக்கிறது
  • இந்தச் சூழலில் துணிவு டீம் ஒரு முடிவெடுத்திருக்கிறது
வாரிசு ஆடியோ ரிலீஸ்; அஜித் செய்யப்போகும் சம்பவம் என்ன தெரியுமா? title=

ஹெச்.வினோத்துடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. இருவரும் இணைந்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக முழு வரவேற்பை பெறவில்லைஇதன் காரணமாக இந்தப் படம் மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது.

இதற்கிடையே வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்லப்போகிறார் என்பதை காண திரையுலகம் ஆவலாக இருக்கிறது. ரசிகர்களும் தங்களுக்குள்ளான கருத்து மோதல்களை சமூக வலைதளங்களில் தொடங்கியிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜுவின் கருத்து சர்ச்சையாக அதற்கும் அஜித் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்தச் சூழலில் இரண்டு படங்களிலிருந்தும் பாடல்களும், அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. சில நாள்களுக்கு முன்பு துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதற்கு அடுத்ததாக வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது.

Varisu

மேலும் வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி 24ஆம் தேதி பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. அதுகுறித்த தகவலை, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கும் ராஜு ட்விட்டரில் கூறிவிட்டு பிறகு அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார். இருந்தாலும், வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி 24ஆம் தேதிதான் நடக்கும் என கூறப்படுகிறது.

ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி என்றாலே விஜய்யின் பேச்சு ஹைலைட்டாக இருக்கும். இதனால் தளபதி ரசிகர்கள் விஜய்யின் பேச்சுகாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் நடக்கும்போது ரசிகர்களின் கவனம் தங்கள் மீதும் இருக்க வேண்டுமென்பதற்காக துணிவு டீம் முடிவு எடுத்திருக்கிறதாம்.

இந்நிலையில், ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேங்ஸ்டா” என பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் படத்தின் மூன்றாவது சிங்கிளுக்கு கேங்ஸ்டா என பெயர் வைக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப் பாடலானது வாரிசு ஆடியோ ரிலீஸ் அன்று வெளியாகலாம் இல்லை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகலாம் என கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க | முழு வீச்சில் தயாராகும் வாரிசு இசை வெளீயீட்டு விழா! சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News