பாபா ரீ ரிலீஸுக்கு இதுவா காரணம்?.. இணையத்தை அதிரவைக்கும் தகவல்

பாபா படத்தை ரஜினி மீண்டும் ரிலீஸ் செய்ததற்கான காரணம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 21, 2022, 05:33 PM IST
  • பாபா படம் கடந்த 11ஆம் தேதி ரீ ரிலீஸானது
  • படம் எதிர்பார்த்த அளவு வசூலிக்கவில்லை
  • பாபா ரீ ரிலீஸுக்கு காரணம் என்ன
பாபா ரீ ரிலீஸுக்கு இதுவா காரணம்?.. இணையத்தை அதிரவைக்கும் தகவல் title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்த படம் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமானது அப்போது படுதோல்வியடைந்தது. ஆன்மீகத் தன்மையோடு வெளியான படத்தை ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகாததும்தான் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லாம் போர்க்கொடி தூக்க அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பணத்தையும் கொடுத்தார் ரஜினி. இப்படி பாபா படம் ரஜினிக்கு மறக்க முடியாத பல துன்ப அலைகளை கொடுத்திருக்கிறது.

இருப்பினும் பாபா படம் ரஜினிக்கு கனவு படம் என்றே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் காந்தாரா போன்ற ஆன்மீகமும் பேண்டஸியும் கலந்த படங்கள் சமீபத்தில் பெற்ற வரவேற்பை பார்த்து பாபாவை ரீ ரிலீஸ் செய்ய ரஜினி திட்டமிட்டார். இதற்காக ஏ.ஆர். ரஹ்மான் சில காட்சிகளுக்கு புதிதாக இசையமைக்க, ரஜினி சில காட்சிகளுக்கு புதிதாக டப்பிங் பேச படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டது. மேலும், படத்தின் க்ளைமேக்ஸும் மாற்றப்பட்டு, பாடலில் இருந்த சில வரிகளும் தூக்கப்பட்டன.

இதனையடுத்து படத்து கடந்த டிசம்பர் 11ஆம் தேதி ரிலீஸானது. ரசிகர்களும் தியேட்டருக்கும் சென்று படத்தை பார்த்து பாபாவை தரிசித்தனர். இருந்தாலும் பாபா படம் ரஜினி நினைத்தபடி வசூலை எட்டவில்லை என்கிறது கோலிவுட் கள நிலவரம், முதல் நாள் 80லிருந்து 90 லட்சம்வரை மட்டுமே பாபா வசூல் செய்ததாக பலரால் கூறப்பட்டது. எனவே பாபா படம் இரண்டாவது முறையும் ரஜினியை ஏமாற்றிவிட்டது என்றே கருதப்படுகிறது.

Rajinikanth

இந்நிலையில் பாபா படத்தின் ரீ ரிலீஸுக்கு என்ன காரணம் என பலரால் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தச் சூழலில் பாபா ரீ ரிலீஸ் செய்யப்பட்டதற்கு காரணம் என்னவென்றால், ரஜினியின் அடுத்த படம் தோல்வியடையும் என பிரபல ஜோதிடர் ஒருவர் ரஜினியிடம் கூறினார். தனது அடுத்த படம் ஜெயிலராக இருக்கும்பட்சத்தில் ஜோதிடர் கூறியது நடந்துவிட்டால் தொடர்ந்து மூன்று தோல்வி படங்களை கொடுத்ததுபோல் ஆகிவிடும்.

எனவே ஏற்கனவே தோல்வியடைந்த படத்தை மறு வெளியீடு செய்துவிடலாம் என திட்டமிட்டுத்தான் ரஜினி பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்தார் என தகவல் வெளியாகி இணையத்தை அதிரவைத்து வருகிறது. மேலும் இந்தத் தகவலை வைத்து எங்க தலைவர் ஜோசியத்தை எப்படி குழப்பிவிட்டார் பார்த்தீர்களா என ட்ரோல்களும் செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க | வாரிசு ஆடியோ ரிலீஸ்; அஜித் செய்யப்போகும் சம்பவம் என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News