திருமணம் குறித்து மவுனம் கலைத்த நித்யா மேனன்
எனக்கே தெரியாம திருமணமா? என கியூட்டாக இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்துள்ளார் நித்யா மேனன்
விஜய், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த நித்யா மேனன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட் மற்றும் கேரள திரையுலகில் தகவல் பரவியது. சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் தீயாக பரவிய செய்திக்கு, இன்ஸ்டாகிராமில் மவுனம் கலைத்துள்ளார் நித்யா மேனன். திருமணம் குறித்து பரவிய செய்தி வதந்தி எனக் கூறியுள்ள அவர், இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் வீடியோவில் “நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை தெரிவிக்க இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். என்னை பற்றி பரவியிருக்கும் செய்தி, ஒரு பெரிய மகிழ்ச்சியான கதை.
மேலும் படிக்க | ரன்வீர் சிங்கிற்கு ஆலியா பட் கொடுத்த ஆதரவு
ஆனால் அப்படியான எந்த திட்டமும் இல்லை. யாரோ ஒருவர், எந்த தகவலையும் உறுதிப்படுத்தாமல் வெளியிட்ட செய்தி, முழுமையான கட்டுக் கதை. எந்த பின்னணியும் இல்லாமல் பரவிக் கொண்டிருக்கும் தகவல். நான் யாரையும் காதலிக்க வில்லை" என நித்யா மேனன் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வெடுக்கலாம் என எடுத்த முடிவுக்கு, திருமண வதந்தியை பரப்பிவிட்டுவிட்டார்கள். நான் ஒரு ரோபோ இல்லை. என்னை தெளிவுபடுத்திக் கொள்ள சிறிது நேரம் தேவை. கடந்த சில வருடங்களாக தினமும் தொடர்ந்து வேலை செய்து வருகிறேன்.
தற்போது எனக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது என நித்யா மேனன் கூறியுள்ளார். படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. நித்யா மேனனால் இப்போது நடக்க முடியாது. ஹைதராபாத்தில் நடைபெற்ற மார்டன் லவ் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தான் பங்கேற்றார். காயம் குறித்து பேசிய அவர், “என் கணுக்கால் மிகவும் நன்றாக இருக்கிறது. நான் இப்போது நடக்க ஆரம்பித்துவிட்டேன். அதுவே மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார். அவரது நடிப்பில் 19(1)(அ), திருச்சிற்றம்பலம், ஆரம் திருக்கல்பனா உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக இருக்கன்றன.
மேலும் படிக்க | மீண்டும் ஒத்தி போடப்படும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: கோல்லம் கேம் வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ