56 வயது நடிகருடன் பூஜா ஹெக்டே காதல்?...
![56 வயது நடிகருடன் பூஜா ஹெக்டே காதல்?... 56 வயது நடிகருடன் பூஜா ஹெக்டே காதல்?...](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/12/09/261676-poojaa.jpg?itok=hKhYw5q8)
பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே சல்மான் கானுடன் காதலில் இருப்பதாக பாலிவுட்டில் தகவல் பரவிவருகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் நடிப்பதை நிறுத்தினார். இந்தச் சூழலில் நெல்சன் திலீப்குமார் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படத்தில் பூஜாவை மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாவிட்டாலும் பூஜா ஹெக்டேவுக்கு ரசிகர்கள் சேர்ந்தனர்.
இதனையடுத்து தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் பூஜா. அந்தவகையில், பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவரது துரதிர்ஷ்டவசமோ என்னவோ அந்த இரண்டு படங்களும் சரியாக போகவில்லை. இருப்பினும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருக்கிறார் பூஜா ஹெக்டே.
இதற்கிடையே பாலிவுட்டிலும் நடித்துவரும் பூஜா ஹெக்டே சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் சர்க்கஸ் என்ற படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த வீரம் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் சல்மான் கான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதேபோல் சல்மான் கான் தயாரிக்கும் இரண்டு புதிய படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்தச் சூழலில் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே காதலில் விழுந்திருப்பதாக பாலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. மேலும் இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் 56 வயதான சல்மான் கான் இதுபோல் பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.
பலரை காதலிக்கவும் செய்தார். ஆனால் அவர்கள் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே சல்மானும், பூஜாவும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
மேலும் படிக்க | தொடரும் உருவ கேலி.... நொந்துபோன நடிகை திவ்யபாரதி - இன்ஸ்டாவில் காரமான போஸ்ட்
மேலும் படிக்க | ப்ரோமோஷனுக்காக இப்படி செய்வதா? நடிகையின் காலில் இயக்குனர் செய்த செயல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ