நேச்சுரல் ஸ்டார் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். முதல் படத்திலேயே தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அதன்பிறகு ஷர்வானந்த் நடித்த ஸ்ரீகரம் படத்தில் நடித்தார். இந்த படமும் தெலுங்கில் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும் அவருக்கு அந்தப் படத்துக்குப் பிறகு டோலிவுட்டில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தமிழ் திரையுலகமான கோலிவுட்டுக்கு திரும்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 6-ல் யார் யார்? கசிந்த போட்டியாளர்கள் பற்றிய தகவல்!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்தாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்திலும் ஜோடியாக நடித்தார். இந்தப் படம் வசூலில் சாதனை படைத்தது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றிப் பெற்ற படம், 100 கோடி கிளப்பிலும் இணைந்தது. டான் வெற்றிக்குப் பிறகு பிரியங்கா மோகனுக்கான பட வாய்ப்புகள் வரிசை கட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறதாம். திரிவிக்ரம் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கூட்டணியில் எஸ்எஸ்எம்பி 28 படம் உருவாக இருக்கிறது. 



ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புகள் நடைபெற இருக்கும் நிலையில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க போகும் ஹீரோயின் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே முதல் பல முன்னணி ஹீரோயின் பெயர்களும் அந்த லிஸ்டில் இருக்கிறதாம். லேட்டஸ்டாக பிரியங்கா மோகனும் மகேஷ் பாபு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருக்கிறாராம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரி விக்ரம் மற்றும் மகேஷ்பாபு கூட்டணி ஒன்று சேர்ந்திருப்பதால், இந்தப் படத்தின் மீது தெலுங்கு திரையுலகில் ஏகபோக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேலும் படிக்க | ஏமாத்த ஒன்னும் இல்ல சேரி மக்கள்னா கெட்ட வார்த்தைதான் - பவி டீச்சரின் சர்ச்சை பேச்சு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR