NGL அறக்கட்டளை சார்பாக அமுதும் தேனும் என்கிற நிகழ்ச்சி பழம்பெரும் நடிகை  ராஜசுலோச்சனாவின்  88ஆவது பிறந்தநாளை  முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு  விருந்தினர்களாக 1960,1970 கால திரைத்துறையைச் சார்ந்த மூத்த நடிகைகள்  ஸ்ரீமதி லதா, லட்சுமி பாய்,ALS ஜெயந்தி, சுஜ்ஜரித்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  மேலும் நிகழ்ச்சியில்  பல பிரபலங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விக்ரமிற்கு பிறகு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் ஒரே படம்! அதிகாரப்பூர்வ தகவல்!


NGL அறக்கட்டளையின் சார்பாக மறைந்த மூத்த நடிகையும்  நடன கலைஞருமான ராஜசுலோச்சனாவின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவை நினைவுகூறும் வகையில் அமுதும் தேனும்  நிகழ்ச்சி நடைபெற்றது.


மேலும் படிக்க | தாய் மண்ணே வணக்கம் - ஸ்பெயினில் சுதந்திர தினம் கொண்டாடிய நயன், விக்கி


இந்த நிகழ்ச்சியின்போது NGL அறக்கட்டளை சார்பாக நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அபிஷேக்,ஜெயஸ்ரீ  ஆகிய இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும்  வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் பன்முக நடிகைகளின் திரைப்படம் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டன. அதனை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் வெகுவாக ரசித்தனர். மேலும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பழங்கால நடிகைகள் தங்கள் கால நினைவுகள் குறித்தும், திரையுலக பயணம் குறித்தும் நினைவுகூர்ந்தனர்.


மேலும் படிக்க | Independence Day 2022: நாட்டை நேசிக்கிறேன் அரசாங்கத்தை அல்ல - மத்திய அரசை சீண்டிய பி.சி.ஸ்ரீராம்


இந்த நிகழ்ச்சிக்கு பலரும் தங்களது வரவேற்பை அளித்தனர். அதுமட்டுமின்றி இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.


மேலும் படிக்க | ஓசிலதானே படம் பார்க்குறீங்க?... பேரரசு கேள்வியால் அதிர்ந்துபோன பத்திரிகையாளர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ