தாய் மண்ணே வணக்கம் - ஸ்பெயினில் சுதந்திர தினம் கொண்டாடிய நயன், விக்கி

பார்சிலோனா சென்றிருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அங்கு இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 15, 2022, 08:46 PM IST
  • நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்
  • அவர்கள் தற்போது ஸ்பெயினுக்கு சென்றிருக்கிறார்கள்
  • அங்கு இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடினார்
 தாய் மண்ணே வணக்கம் - ஸ்பெயினில் சுதந்திர தினம் கொண்டாடிய நயன், விக்கி title=

நானும் ரௌடிதான் படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. இருவரும் ஒரேவீட்டில் இருந்துவந்த சூழலில் இவர்களது திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடந்தது. மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இந்தத் திருமணத்தில் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையே, தங்களது திருமணத்தையொட்டி தமிழ்நாட்டில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இருவரும் உணவு ஏற்பாடு செய்தனர். அவர்களது இந்த செயல் பரவலான வரவேற்பைப் பெற்றது. திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், உங்களது ஆதரவும் அன்பும் தொடர்ந்து எங்களுக்கு வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தனர்.

இதனையடுத்து நயனும், விக்னேஷ் சிவனும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. ஹனிமூனை முடித்திவிட்டு நாடு திரும்பிய நயன், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் பாடலையும், தொடக்க நிகழ்ச்சியையும் இயக்கினார். மேலும் அஜித் படத்தின் கதை விவாதத்திலும் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.

 

இந்நிலையில்,விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு செல்வதாக விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி சில நாள்களுக்கு முன்பு பார்சிலோனா சென்ற நயனும், விக்னேஷ் சிவனும் ரிலாக்ஸாக அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்துவருகின்றனர். அதுமட்டுமின்றி அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகின.

மேலும் படிக்க | Independence Day 2022: நாட்டை நேசிக்கிறேன் அரசாங்கத்தை அல்ல - மத்திய அரசை சீண்டிய பி.சி.ஸ்ரீராம்

இந்நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பார்சிலோனாவில் சுதந்திர தினத்தை கொண்டாடினர். அதுதொடர்பாக வெளியான வீடியோவில் நயனும், விக்னேஷ் சிவனும் தேசிய கொடியை பிடித்துக்கொண்டு நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News