புன்னகை மன்னன் திரைப்படத்தில் தன்னுடைய சம்மதம் இல்லாமல் லிப் லாக் சீன் படப்பிடிப்பு நடந்ததாக அப்படத்தின் கதாநாயகி, நடிகை ரேகா தெரிவிதுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1986ம் ஆண்டு வெளியான கடலோரக் கவிதைகள் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரேகா. இவர் 1986ம் ஆண்டு இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் புன்னகை மன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக் நடித்தார். அப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் நடிகை ரேகாவும் தற்கொலை செய்துகொள்ளும் காட்சி இடம்பிடித்திருக்கும். அதில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் ரேகாவிற்கு முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம்பிடித்திருக்கும். 


அந்தவகையில் தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பெட்டி ஒன்று அளிதிருந்தார். அகில்., புன்னகை மன்னன் திரைப்படத்தில் இயக்குநர் பாலசந்தரும் நடிகர் கமல்ஹாசனும் தன்னிடம் முத்தக்காட்சிக் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தன்னுடைய சம்மதம் இல்லாமலே அந்த முத்தக்காட்சி படப்பிடிக்கப்பட்டதாகவும் பகிர்ந்துகொண்டார். பின்னர் தன்னுடைய அம்மாவிடம், தன்னை ஏமாற்றி முத்தம் கொடுத்துவிட்டதாக கூறியதாகவும் நடிகை ரேகா பேட்டியில் தெரிவித்துள்ளார். 


 



 


இந்த சம்பவம் குறித்து அப்போதே ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்ததாகவும், அதனால் நடிகர் கமலும், இயக்குநர் பாலச்சந்தரும் கோபத்தில் இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். 


இந்நிலையில் தற்போது இந்த பேட்டி திடீரென வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தவறு என்றும் பலர் அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.