லேடி சூப்பர் ஸ்டார் வரிசையில் ‘லேடி பவர் ஸ்டார்’ ஆன சாய் பல்லவி!- நடிகை சொல்வது என்ன?
நடிகை சாய் பல்லவிக்கு லேடி பவர் ஸ்டார் என பட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அது பற்றிய தனது கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் மலர் டீச்சர் எனும் கதாபாத்திரம் வாயிலாக தென் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி. தொழில் முறை மருத்துவரான சாய் பல்லவி, தியா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் மாரி -2, சூர்யாவுடன் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மாரி- 2 வில் இவர் நடனம் ஆடிய ரவுடி பேபி பாடல் பெரும் கவனத்தைப் பெற்றது. தமிழ்,மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்துவருகிறார் சாய் பல்லவி.
சினிமாவில் நடிகர்களைப்போலவே ஒரு சில நடிகைகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படுவது உண்டு. அந்த வகையில் சாய் பல்லவிக்கு லேடி பவர் ஸ்டார் எனும் பட்டம் தெலுங்கு சினிமாவில் கிடைத்துள்ளது.
அண்மையில் விழாவொன்றில் இடம்பெற்ற வீடியோ தொகுப்பிலும் அவரை லேடி பவர் ஸ்டார் எனக் குறிப்பிட்டி இருந்தனர். தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தைக் கண்டதும், முகத்தைக் கையால் மறைத்தபடி அவர் சிரித்த காட்சியும் வைரல் ஆனது.
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட பட்டம் பற்றி நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார். அந்த வகையில், தனக்கு இது போன்ற பட்டங்கள் கொடுக்கப்படுவதில் தனக்கு விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | விஜய்யின் ‘வாரிசு’ போஸ்டர்ஸ் 6.01 PM, 11.44 PMக்கு வெளியானது ஏன் தெரியுமா?
இதுபோன்ற பட்டங்கள் வீணான அழுத்தங்களைக் கொடுத்து, நடிப்பில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் சாய் பல்லவி தெரிவித்துள்ளார். தன் மீது அன்பு செலுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தான் தயார் எனவும் அதேநேரம் பட்டங்களில் விருப்பம் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR