ரொம்ப கடினமாக இருந்தது - விவாகரத்து குறித்து ஓபனாக பேசிய சமந்தா
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா தனக்கு விவாகரத்து ஆனது தொடர்பாக பேசியிருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த சமந்தா தமிழில் அறிமுகமாகி தெலுங்கிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்த அவர் திருமணம் செய்துகொண்டார். சிறப்பாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. இருவரும் தங்களுக்கு பரஸ்பரமாக பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் இருவரது ரசிகர்களுமே அதிர்ச்சியடைந்தனர். மேலும் விவாகரத்தால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை பாதாளத்திற்கு செல்லும் என பலர் கூறினர்.
ஆனால், திருமண பந்த முறிவுக்கு பிறகு சமந்தாவின் கிராஃப் உச்சம் சென்று கொண்டிருக்கிறது. தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த அவர் புஷ்பா படத்தில் பாடல் ஒன்றுக்கும் நடனமாடினார். அவரது நடனத்தாலேயே உம் சொல்றியா மாமா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.
இதற்கிடையே அவர் தி ஃபேமிலி மேன் சீரிஸிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படி தமிழ், தெலுங்கு, பாலிவுட் என ரவுண்ட் கட்டி அடிக்கும் சமந்தா அடுத்ததாக ஹாலிவுட்டிலும் நடிக்கவிருக்கிறார். இதனால் சமந்தா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில், அக்ஷய் குமாருடன் சமந்தா காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்திய அளவில் பலரை ரசிகர்களாக பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களிடம் கரண் ஏகப்பட்ட கேள்விகளை கேட்பார். அதற்கு அவர்களும் வெளிப்படையாகவே பதில் சொல்வார்கள்.
மேலும் படிக்க | ஜெயிச்சிட்டோம் மாறா - தேசிய விருது வென்றார் சூர்யா
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தாவிடம் விவாகரத்து தொடர்பாக கரண் ஜோஹர் பேசினார். அப்போது சமந்தா, “முதலில் இது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது நன்றாக இருக்கிறது. இயல்பான நிலைக்கு வந்துவிட்டேன். எப்போதும் இல்லாத அளவு வலிமையானவளாக இப்போது இருக்கிறேன்.
அந்த கடினமான உணர்வுகள் எப்படியானது என்றால், இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்து கூர்மையான பொருட்களை மறைத்து வைத்திருப்பது போன்றது. அந்த உணர்வு இப்போதும் இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் சில சமயங்களில் இணக்கம் வரலாம்” என்றார்.
மேலும் படிக்க | ’ஜெயிச்சிட்டோம் மாறா’ 5 தேசிய விருதுகளை வென்ற சூரறைப்போற்று
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ