சென்னையைச் சேர்ந்த சமந்தா தமிழில் அறிமுகமாகி தெலுங்கிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்த அவர் திருமணம் செய்துகொண்டார். சிறப்பாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. இருவரும் தங்களுக்கு பரஸ்பரமாக பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் இருவரது ரசிகர்களுமே அதிர்ச்சியடைந்தனர். மேலும் விவாகரத்தால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை பாதாளத்திற்கு செல்லும் என பலர் கூறினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், திருமண பந்த முறிவுக்கு பிறகு சமந்தாவின் கிராஃப் உச்சம் சென்று கொண்டிருக்கிறது. தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த அவர் புஷ்பா படத்தில் பாடல் ஒன்றுக்கும் நடனமாடினார். அவரது நடனத்தாலேயே உம் சொல்றியா மாமா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.


மேலும் படிக்க | தளபதி விஜய் பாடல் மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்


இதற்கிடையே அவர் தி ஃபேமிலி மேன் சீரிஸிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படி தமிழ், தெலுங்கு, பாலிவுட் என ரவுண்ட் கட்டி நடிக்கும் சமந்தா அடுத்ததாக ஹாலிவுட்டிலும் நடிக்கவிருக்கிறார். இதனால் சமந்தா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.



தற்போது சமந்தா நடிப்பில் பான் இந்தியா படமாக யசோதா படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தை இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கிவருகிறார்கள்.


இந்நிலையில் நடிகை சமந்தா பிரதமர் மோடி குறித்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளன. அந்த வீடியோவில், "நான் மோடி ஜியின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தலைமையில் நாடு பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வார் என நான் நம்புகிறேன்" என பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


 



அதேசமயம், இந்த வீடியோ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சமந்தா பேசிய வீடியோ. பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது சமந்தா பேசிய வீடியோவைதான் தற்போது இணையத்தில் பலரும் ட்ரெண்ட் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata