நடிகை சமந்தா அண்மைக்காலமாக லைம்லைட்டில் இருந்து கொண்டே இருக்கிறார். குறிப்பாக, அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் ஆடிய கவர்ச்சி தாண்டவத்துக்குப் பிறகு சமந்தாவை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை சமூக ஊடகங்களில் கூடியது. ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு சமந்தாவின் நடனம் ரசிகர்கள் மனதை விட்டும் இன்னும் அகலவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? பிரபாஸ் விளக்கம்


அண்மையில் அந்தப் பாடலுக்கு சமந்தா ஒத்திகை பார்க்கும் வீடியோ வைரலான நிலையில், இப்போது சமந்தாவின் இன்ஸ்டாகிராமில் இருக்கும் வொர்க் அவுட் வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் சமந்தா, ஜிம் மாஸ்டரின் அறிவுரைப்படி பயிற்சியை மேற்கொள்கிறார். சினிமாவில் டெடிகேஷனுடன் இருப்பது போலவே பிட்னஸிலும் அக்கறையாக இருக்கும் சமந்தாவின் இந்த வீடியோவை பார்த்து அவரை பாராட்டியுள்ளனர்.



நடிகை சமந்தா, தென்னிந்திய திரைத்துறையில் மிகவும் ஸ்டார் நடிகையாக உள்ளார். பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்திருந்த அவர், நாகசைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமண உறவை முறித்துக் கொண்டார். அதுவரை திரையில் கவர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தாத சமந்தா, மணமுறிவுக்குப் பிறகு தனக்கு விருப்பம் இருக்கும் கதாப்பாத்திரங்களை தைரியமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும், கலக்கலான போட்டோஷூட்களை நடத்தி, இன்ஸ்டாவில் தொடர்ச்சியாக பதிவேற்றிக் கொண்டிருக்கிறார். 



மேலும் படிக்க | KGF2 படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு..! பீஸ்ட் டிரெய்லர் எப்போது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR