நம் அனைவருக்குமே விதவிதமான பழக்க வழக்கங்கள் இருக்கும். சிலருக்கு உயிரைக்கொள்ளும் மிருகங்களையும் வளர்க்கும் வினோத பழக்க வழக்கங்கள் இருக்கும். இதற்கு நடிகர்களும் விதிவிலக்கல்ல. இப்படித்தான், ஒரு நடிகை இருப்பதிலேயே கொடூர விலங்காக கருதப்படும் சிறுத்தையை தன் வீட்டில் வைத்து வளர்த்துள்ளார். அந்த நடிகை யார்? அவர் சிறுத்தையை வீட்டில் வைத்து வளர்த்தது ஏன்? இங்கே பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாவித்ரி..


தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுடன் அதிக படங்களில் நடித்து பிரபலமானவர் சாவித்ரி. தெலுங்கு மற்றும் தமிழில் அதிகளவில் படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்திய அளவில் அதிகம் மதிக்கப்பட்ட நாயகிகளுள் இவரும் ஒருவர். நடிகை என்பதை தாண்டி, பாடகியாகவும் இயக்குநராகவும் வலம் வந்தார். இது மட்டுமல்ல, அந்த காலத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கிய நடிகையாக இருந்தவர் இவர். சாவித்ரிக்கு ‘மகாநதி’ என்ற இன்னொரு பெயரும் உள்ளது. இதை வைத்துதான், 2018ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை வரலாறும் எடுக்கப்பட்டது. இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியின் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ஜெமினி கணேசனாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் வந்திருப்பார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது. இதில் சாவித்ரியின் கதாப்பாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருப்பார். 


மேலும் படிக்க | மழை நிவாரண நிதிக்கு பெரிய தொகையை கொடுத்த ஹரிஷ் கல்யாண்! எவ்வளவு தெரியுமா?


1934ல் பிறந்த சாவித்ரி, 1950 முதல் 1960 வரை தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக கொடிக்கட்டி பறந்தார். 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இவர். நடிப்பு மட்டுமல்ல, ஏழை எளியோருக்கு உதவி செய்வதிலும் பறந்த மனம் படைத்தவர் இவர். தனது இரக்க குணத்திற்கான பெயர் போன இவர், பலரது வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். ஜெமினி கணேசனை 1952ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சாவித்ரிக்கு ஒரு பெண் பிள்ளையும் ஒரு மகனும் இருக்கின்றனர். 


 


சிறுத்தையை வளர்த்த சாவித்ரி..


நாய், பூனை மட்டுமல்ல முயல், வெள்ளெலி (Hamster), மாடு என பல பிராணிகளை தங்களின் செல்லப்பிள்ளைகள் போல வளர்ப்பதுண்டு. ஒரு சிலர் ஒரு படி மேலே போய் உயிரையை பறித்துவிடும் பிராணிகளையும் பாசம் கொண்டு அரசாங்கத்திற்கு தெரியாமல் வளர்ப்பர். அப்படி ஆபத்துக்களுடன் விளையாட பிடித்த நடிகை சாவித்ரி. இவர், தனது வீட்டில் சிறுத்தையை வைத்து வளர்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 


சாவித்ரிக்கு இது போன்ற மிருகங்களை மிகவும் பிடிக்கும் என கூறப்படுகிறது. இவர் இந்த மிருகத்தை வீட்டில் வைத்து வளர்த்தாரா இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


சாவித்ரியின் இறப்பு..


ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருந்த சாவித்ரி, 1981ஆம் ஆண்டு உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர் சாவித்ரி சர்க்கரை நோய் மற்றும் அதிக ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அது மட்டுமன்றி குடிப்பழக்கத்திற்கும் இவர் அடிமையாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இறப்பதற்கு 19 மாதங்கள் முன்பு வரை சாவித்ரி கோமாவில் இருந்தார். அது மட்டுமன்றி, இவருக்கும் ஜெமினி கணேசனுக்கும் இருந்த உறவிலும் விரிசல் விழுந்தது. இதனால் சாவித்ரியின் திரை வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் கண்களாலேயே பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இது போன்ற ஒரு நடிகை இதுவரை பிறக்கவில்லை என்று சினிமா ரசிகர்கள் அவ்வப்போது உச்சி கொட்டுவதுண்டு. 


மேலும் படிக்க | கணவரின் படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ