கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்திருந்த நடிகையர் திலகம் படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகிவிட்டது.
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2018ஆம் ஆண்டு வெளியான படம், மகாநதி.
கீர்த்தி சுரேஷ், சாவித்திரியை அச்சு அசலாக அப்படியே பிரதீபலித்த படம் இது.
இந்த படம், தெலுங்கு மொழியில் மகாநதி என்ற பெயரிலும் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் இப்படம் வெளியானது.
மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக வேறு ஒரு நடிகையை சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்தனர். அவர் யார் தெரியுமா?
திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனாவாக நடித்த நித்யா மேனனைத்தான் சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்தார்களாம்.
தொடரி படத்தில் கீர்த்தியின் நடிப்பை பார்த்த மகாநதி இயக்குநர் அஸ்வின், கண்டிப்பாக கீர்த்திதான் சாவித்திரியாக நடிக்க வைக்க வேண்டும் என்று கூறினாராம்.
மகாநதி படம் வெளியாகி 5 வருடம் ஆனதை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.