Boney Kapoor Talks About Sridevi's Death : தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து இந்தியாவின் ஐகானிக் நடிகைகளுள் ஒருவராக இருந்தவர், நடிகை ஸ்ரீதேவி. இவர், கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் உயிரிழந்தார். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த பேச்சு அடிக்கடி அடிபடும் நிலையில், இது குறித்து அவரது கணவர் பாேனி கபூர் பேசியுள்ள விஷயமும், அவரது மரணம் குறித்து பேசியுள்ள தகவல்களும் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீதேவியின் மரணம்..


ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கதாநாயகிகளுள் ஒருவர், ஸ்ரீதேவி. தமிழில் டாப் ஹீராேக்களாக இருந்த கமல், ரஜினி மட்டுமல்ல, பிற மொழி படங்களில் டாப் ஹீரோக்களாக இருந்தவர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் திரையுலகை விட்டு தள்ளி இருந்த இவர், அதன் பிறகு கம்-பேக் கொடுத்தார். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கும் பாேதுதான், இவர் இறந்து விட்டதாக செய்தி வந்தது. இதைக்கேட்டு ஸ்ரீதேவிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.


ஸ்ரீதேவி உயிரிழந்த போது அவருக்கு வயது 54. துபாயில் தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அவரது மகள்கள் இங்கிருக்க, தனது கணவர் போனி கபூருடன் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. தனது அறையின் பாத் டப்பில் குளித்துக்கொண்டிருந்த போது தற்செயலான நீரில் மூழ்கியதுதான் அவரது இறப்பிற்கு காரணம் என துபாய் போலீஸார் தெரிவித்தனர். இறுப்பினும் இவரது இறப்பின் மீது பலருக்கு சந்தேகம் இருந்தது. 


மேலும் படிக்க | ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் தளத்தில் விபத்து! மரண பயத்தில் அஜித்-ஆரவ்! திக் திக் வைரல் வீடியோ..


5 வருடங்களுக்கு பிறகு வாய் திறந்த போனி கபூர்:


போனி கபூர், தனது மனைவியின் இறப்பை பற்றி எந்த ஊடக தளங்களிலும் பேசாமல் இருந்தார். தற்போது அவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, ஏன் 5 வருட காலமாக ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து எங்குமே பேசவில்லை என்பதற்கான விளக்கத்தை கொடுத்த அவர், துபாய் போலீஸார் அவரிடம் ஸ்ரீதேவி இறந்த போது இது குறித்து தன்னிடம் 24 முதல் 48 மணி நேரம் வசரை விசாரித்ததாக தெரிவித்தார். 


“இயற்கை மரணம் இல்லை..”


தொடர்ந்து பேசிய அவர், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது இல்லை என்றும், அது விபத்தினால் ஏற்பட்ட மரணம் என்றும் கூறினார். மேலும், ஸ்ரீதேவி டயட் இருக்கும் காரணத்தால் அவர் உணவில் உப்பு சேர்த்துக்கொண்டதில்லை என்றும், இதனால் அவருக்கு அடிக்கடி தலை சுற்றல்-மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அவர் உயிரிழப்பதற்கு முன்னர், தங்களின் குடும்ப மருத்துவர் உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு ஸ்ரீதேவியிடம் கூறியதாகவும் போனி கபூர் குறிப்பிட்டிருக்கிறார். 


“உயிர் இருக்கும் வரை எடுக்க விட மாட்டேன்!”


பாேனி கபூர், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், அவரிடம் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஸ்ரீதேவி இருந்த வரை, அவர் தனிப்பட்ட நபராகவே இருந்ததாகவும், பிரைவசி முக்கியம் என நினைத்தவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ரீதேவியின் வாழ்க்கை தனிப்பட்டதாகவே இருக்கட்டும் என்றும் இதனால் தான் அவரது பயோபிக்கை எடுக்க உயிர் இருக்கும் வரை அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க | Ajith Kumar Accident: “லைசன்ஸ் இருக்கா உங்க கிட்ட?” விபத்து ஏற்படுத்திய அஜித்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ