கதாநாயகிகளுக்கு சம்பளமே இல்லை - புலம்பும் தமன்னா
கதாநாயகர்கள் அளவுக்கு கதாநாயகிகளுக்கு சம்பளம் கொடுப்பதில்லை என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
கேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா. பாலாஜி சக்திவேலின் கல்லூரி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி முன்னணி கதாநாயகர்களான விஜய், (சுறா), அஜித் (வீரம்), தனுஷ், கார்த்தி உள்ளிட்டோருடனும் நடித்திருக்கிறார். இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் ஜெயிலர் படத்தில் கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவருகிறார். தமன்னாவுக்கென்று ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
இந்நிலையில் தமன்னா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாககூட பார்க்க மாட்டார்கள். கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது. இந்த போக்கு சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது.
கதாநாயகிகளின் புகைப்படம் பட 'போஸ்டர்'களில் வருவதே பெரிய விஷயம். பட விழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் சொல்வார்கள்.
மேலும் படிக்க | எப்படி இருக்கிறது எஸ்ஜே சூர்யாவின் 'கடமையை செய்' படம்? திரைவிமர்சனம்!
அதேவேளை கதாநாயகி வரவில்லை என்றால் இட்டுக்கட்டி பேசுவார்கள். இந்த நிலைமை எப்போது மாறுமோ” என கேள்வி எழுப்பினார். தமன்னா கடைசியாக தமிழில் 2019ஆம் ஆண்டு ஆக்ஷன் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நடிப்பதை நிறுத்தினால் வீடு முற்றுகைதான் - நடிகரை எச்சரித்த சீமான்
மேலும் படிக்க | ரோலக்ஸ் - டில்லிக்காக ஒரு ரீமேக் கதை; ரகசியம் உடைத்த லோகேஷ் கனகராஜ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ