விக்ரம் படத்தின் வெற்றி, லோகேஷ் கனகராஜை பெரிய உச்சாணிக் கொம்பில் அமர்த்தியுள்ளது. அவருடன் படம் செய்வதற்கு பல பெரிய நடிகர்கள் தயாராக இருக்கின்றனர். தமிழின் முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் லோகேஷ் கனகராஜூக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சல்மான்கான் அழைத்தும் மறுத்திருக்கிறார். விக்ரம் படத்தின் வேலைகள் சென்று கொண்டிருந்ததால், அந்த நேரத்தில் மாஸ்டர் படத்தை இயக்க முடியாது என கூறியிருக்கிறார் லோகேஷ்.
தற்போது விக்ரம் படத்தின் வெற்றியைப் பார்த்த சல்மான்கான் மீண்டும் லோகேஷ் கனகராஜை அழைத்து பாராட்டினாராம். மோகன்லால், மம்முட்டி, ராம் சரண், யாஷ் ஆகியோரிடம் இருந்தும் லோகேஷ் கனகராஜூக்கு பாராட்டு வந்திருக்கிறது. படம் இயக்கவும் அழைப்புகள் வந்திருக்கிறதாம். ஆனால், தளபதி 67 படத்தின் வேலைகளில் மும்முரமாக இருப்பதால், இப்போதைக்கு அதில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். நிறைய வாய்ப்புகள் வந்திருந்தாலும், அவை அனைத்தையும் சரியான நேரத்தில் பயன்படுத்தி படத்தை மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | வைரலாகும் நடிகர் சூரி கோவிலில் ஆடிய ஒயிலாட்ட வீடியோ
ரஜினியை ஹீரோவாக வைத்தும், கமல்ஹாசனை வில்லனாக வைத்து ஒரு படம் வொர்க் பண்ண வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் அவர், டெல்லி மற்றும் ரோலக்ஸ் கதைகளுக்கு முன்பே மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தை ரீமேக் செய்ய முயற்சி செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபவிடமும் பேசியிருக்கிறார். ஆனால், தமிழ் உரிமை வேறொருவரிடம் இருந்ததால், அந்தப் எண்ணத்தை கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ள லோகேஷ், இரும்புக்கை மாயாவி கதை எப்போதும் சூர்யாவுக்காக தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஜெய்லரில் என்டிரியான நீலாம்பரி; மீண்டும் படையப்பா காம்போ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ