Trisha Salary For The GOAT Movie : வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தி கோட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று, ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய்யுடன் பேக் டு பேக் படங்களில் த்ரிஷா..


தமிழ் திரையுலகின் டாப் ஹீரோவான விஜய்யுடன், அதிக படங்களில் சேர்ந்து நடித்த ஒரே நாயகி த்ரிஷாதான் என்பது அனைவருக்கும் தெரியும். கில்லி படத்தில் ஆரம்பித்த இவர்களின் பயணம், திருப்பாச்சி, குருவி, ஆதி என பல படங்களை கடந்து, கடைசியாக லியோவிலும் தொடர்ந்தது. இதையடுத்து, தி கோட் படத்தில் விஜய் சினேகா-மீனாட்சி செளத்ரி ஆகியோருடன் சேர்ந்து நடித்தார். இதில், த்ரிஷா கேமியோ ரோலில் வருகிறார் என்பது பலருக்கு தெரியாது. படத்தை முதல் நாள், முதல் ஷோவிலேயே பார்த்த பலருக்கு இது பெரும் சர்ப்ரைஸாக அமைந்தது. 


ஒரு பாடலுக்கு நடனம்..


நடிகை த்ரிஷா, இதுவரை ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியதில்லை. ரஜினிகாந்துடன் நடிக்க, பேட்ட படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்தாரே தவிர ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுபவராக வரவில்லை. ஆனால், விஜய் நடித்திருக்கும் தி கோட் படத்தில் “மட்ட” பாடலுக்காக அவர் நடனமாடியிருக்கிறார். இதில், மஞ்சள் நிற புடவை கட்டி, இளம் வயது விஜய்யாக வருபவருடன் அவர் நடனமாடியிருக்கிறார். 


நடிகை த்ரிஷா, தனது இளமை காலத்தில் பல படங்களில் நடனமாடியிருக்கிறார். ஆனால், சமீபத்திய படங்களில் அவர் பெரிதும் நடனமாடவில்லை. அதனால், இப்படத்தில் விஜய்யுடன் ஈடுகொடுத்து நடனமாட முடிாயமல் இருந்தது தெரிந்தது. இருப்பினும், மீண்டும் விஜய்யையும் த்ரிஷாவையும் திரையில் பார்த்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


மேலும் படிக்க | எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..



சம்பளம் எவ்வளவு? 


தி கோட் படம், சுமார் ரூ.400 கோடி அளவில் உருவானதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்னர் தெரிவித்திருந்தார். இதில், நடிகர் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூ.200 கோடி என அர்ச்சனா கூறியிருந்தார். விஜய் மட்டுமல்லாமல் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, அஜ்மல் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். இவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. த்ரிஷா, ஒரு பாடலுக்கு நடனமாடினாலும் அவருக்கும் பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. 


சில நிமிட பாடலில், 1 நிமிடம் கூட வராத த்ரிஷாவிற்கு சுமார் ரூ.50 முதல் 80 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 


விஜய்க்கு நெகடிவ் கதாப்பாத்திரம்..


நடிகர் விஜய், பல ஆண்டுகளாக மாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். இரட்டை வேடங்களில் நடிக்கும் படங்களிலும், அது பாேன்ற கதாப்பாத்திரங்கள்தான் அவருக்கு அமைந்து வருகிறது. கடைசியாக ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் விஜய், இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதில் ஒன்று நெகடிவ் கதாப்பாத்திரம். அதே போல, பல ஆண்டுகள் கழித்து தி கோட் திரைப்படத்திலும் அவர் ஒரு நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 


மேலும் படிக்க | GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ