GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?

GOAT OTT Release: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம். 

GOAT OTT Release: தமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருப்பவர், விஜய். இன்னும் சில மாதங்களுக்குள் இவர் தமிழ் திரையுலகை விட்டு விலக இருக்கிறார். இவரது கடைசி படத்திற்கு முந்தைய படமாக அமைந்திருக்கிறது, தி கோட் (The Greatest Of All Time). வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில், விஜய்யுடன் இணைந்து, பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ஓடிடி உரிமையையும், டிஜிட்டல் உரிமையையும் ஒரு தளம் பெற்றிருக்கிறது. அது என்ன தளம் தெரியுமா? 

1 /8

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகியிருக்கிறது தி கோட் (The Greatest Of All Time) திரைப்படம். இதனை வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். 

2 /8

லைலா, சினேகா, பிரசாந்த், பிரபு தேவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மைக் மோகன், இதில் வில்லனாக வருகிறார். 

3 /8

தி கோட் திரைப்படத்தில், விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ஒன்று ஹீரோ-இன்னொன்று வில்லன். 

4 /8

தி கோட் படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கிறார். படம், சுமார் ரூ.400 கோடி செலவில் உருவாகியிருக்கிறது. இதில், விஜய்யின் சம்பளம் மட்டும், 200 கோடி. 

5 /8

தி கோட் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. நல்ல விமர்சனங்களையும் இப்படம் பெற்றிருக்கிறது. 

6 /8

விஜய்யின் டீ-ஏஜிங் தோற்றத்தையும், கொஞ்சம் தொய்வான திரைக்கதையையும்தான் பலர் குறை கூறி வருகின்றனர். 

7 /8

தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. 

8 /8

தி கோட் படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இதன் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.