ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படம் 'மேயாத மான்'. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். மேலும் வைபவ் – ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயண் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர். ஏற்கனவே படத்தில் இருந்து `தங்கச்சி’ மற்றும் `என்ன நான் செய்வேன்’ என்ற இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.


இந்நிலையில், `மேயாத மான்’ படத்தில் இருந்து அடுத்த பாடல் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் இந்தியாவின் முதல் முகவரி பாடலாக (Address Song) என்று குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டு உள்ளார்.


அதனைத் தொடர்ந்து படத்தை வருகிற நவம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.