வசூலை அள்ளிக் குவிக்கும் ஆதிபுருஷ்..எத்தனை கோடி தெரியுமா?

Adipurush Box Office Collections: நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான புராண காவியமான `ஆதிபுருஷ்` திரைப்படம் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்து சாதனை புரிந்து வருகின்றது.
ஓம் பிரகாஷ் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ராமராக நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் இன்று அதாவது ஜூன் 16 ஆம் தேதி வெளியாகியுள்ளது. ராமயண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ஆதிபுருஷ். ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்று உலகம் முழுக்க கடந்த 16 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் ஆறு மாதங்களுக்கு முன்னரே வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு படத்தின் VFX காட்சியை சரிசெய்து படத்தை தாமதமாகவே தற்போது வெளியிட்டுள்ளனர். இதையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
மேலும் படிக்க | சினிமாவிற்கு 'குட்-பை’ சொல்லும் லோகேஷ்? இயக்குநரின் ‘இந்த’ முடிவால் ரசிகர்கள் சோகம்!
இந்த நிலையில் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் வசூலில் புதிய சாதனையை படைத்து பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார்.
டீ சிரீஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான மூன்று தினங்களில் உலகம் முழுவதும் 340 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
பான் இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'பாகுபலி 2' , 'சாஹோ', 'ஆதி புருஷ்' ஆகிய மூன்று படங்களும், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் புதிய சாதனையை நிகழ்த்தி பான் இந்திய வசூல் நட்சத்திரமாக உயர்ந்து பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறார்.
இதனிடையே இவர் தற்போது 'கே. ஜி. எஃப்' படப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'சலார்' எனும் திரைப்படத்திலும், தேசிய விருது பெற்ற இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் 'புராஜெக்ட் கே' எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் படத்தில் இருந்து பிரபல நாயகி நீக்கம்..! காரணம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ