சினிமாவிற்கு 'குட்-பை’ சொல்லும் லோகேஷ்? இயக்குநரின் ‘இந்த’ முடிவால் ரசிகர்கள் சோகம்!

Lokesh Kanagaraj: பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த விஷயத்தால் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 20, 2023, 01:26 PM IST
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
  • விஜய்யை வைத்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
  • சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருப்பதாக் ஒரு பேட்டியில் கூரியுள்ளர்
சினிமாவிற்கு 'குட்-பை’ சொல்லும் லோகேஷ்? இயக்குநரின் ‘இந்த’ முடிவால் ரசிகர்கள் சோகம்! title=

தமிழ் சினிமாவின் திறமைமிகு இயக்குநர்களின் பட்டியலில், முக்கிய இடத்தை பெற்றுள்ளவர் லோகேஷ் கனகராஜ். திரையுலகிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே பிரபல நடிகர்களை வைத்து இயக்கும் நிலைக்கு வந்துவிட்டார். இவர், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் எதிர்கால ப்ளான் குறித்தும் பேசினார். அப்போது அவர் பேசிய விஷயம் ஒன்று அவரது ரசிகர்களை சோகமாக்கியுள்ளது.

10 படங்களுக்கு பிறகு பை-பை!

லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ஆவதற்கு முன்னர் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். சினிமா மீது இருந்த ஆசையினால் அவ்வப்போது குறும்படங்களையும் இயக்கி வந்தார். மாநகரம் படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர், தற்போது நடிகர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இவர், தனக்கு சினிமாவில் அதிக படங்களை இயக்க விருப்பம் இல்லை என்றும் 10 படங்கள இயக்கி விட்டு சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

மேலும் படிக்க | மாமன்னன் படம் வெளியாகுமா? படத்திற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

ஹாலிவுட் இயக்குநரை காப்பி அடிக்கும் லோகி? 

ஆங்கில இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவர் குயிண்டன் டரண்டினோ. 1992ஆம் ஆண்டு திரைப்படங்களை இயக்க ஆரம்பித்த இவர், 2019ஆம் ஆண்டு வரை வெறும் 10 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அதிலும் ஹாலிவுட்டின் பிரபல நடிகர்களைத்தான் தன் படங்களில் நடிக்க வைத்துள்ளார். இதே போலத்தான் லோகேஷ் கனகராஜ்ஜும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். தமிழின் பிரபல நடிகர்களான விஜய், கார்த்தி ஆகியோரை வைத்து படங்களை இயக்கிய இவர் அடுத்து ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குயிண்டன் டரண்டினோ போலவே, லோக்கேஷ்ஷும் தற்போது 10 படங்களை இயக்கிய பிறகு சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் பலர், ஹாலிவுட் இயக்குநரை இவர் காப்பி அடிக்கிறாரோ என சந்தேகம் அடைந்துள்ளனர். 

எல்.சி.யூவின் நிலை என்ன? 

லோகேஷ் கனகராஜ், ஹாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் என்ற புது பரிமானத்தை உருவாக்கிவிட்டார். இதில் ஏற்கனவே கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் இடம் பெற்று விட்டன. விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் எல்.சி.யூவில் இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. தற்போது லோகேஷ் 10 படங்களுக்கு மேல் இயக்க இருப்பதில்லை என கூறிவிட்டதால் எல்.சி.யூவின் நிலை என்ன என்பது தெரியவில்லை. 

லியோ அப்டேட்: 

லியோ படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தில் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் தற்போது புதிதாக இன்னொரு நடிகரும் இணைந்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் வையாபுரியும் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். வரும் 22ஆம் தேதி தளபதியின் பிறந்தநாளையொட்டி லியோ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம், லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக்க் யூனிவர்ஸில் இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ள இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என லோக்கேஷ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | அப்பா ஆனார் ராம் சரண்.. 11 வருடங்களுக்கு பின் பிறந்த முதல் குழந்தை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News