ஏ தில் ஹை முஸ்கில்- தடை நீங்கியது!!
மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுடனான சந்திப்பிற்குப் பின்னர் ''ஏ தில் ஹை முஸ்கில்'' திரைக்கு வருவதற்கு இருந்த தடை நீங்கியது. அக்டோபர் 28-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரண் ஜோஹர் தயாரிபில் ''ஏ தில் ஹை முஸ்கில்'' படம் உருவாகயுள்ளது. பாகிஸ்தான் நடிகர் பாவத் கானுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்த ''ஏ தில் ஹை முஸ்கில்'' என்ற இந்தி திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. கரண் ஜோஹர் தயாரிபில் உருவான இந்த படத்தை, இந்தியாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையை நீக்க இன்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் கரண் ஜோஹர் இருவரும் ராஜ் தாக்கரேவை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பிற்குப் பின்னர் ''ஏ தில் ஹை முஸ்கில்'' படத்தை திரையிட ராஜ் தாக்கரே சம்மதம் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் நடிகர்களை திரைப்படத்தில் நடிக்க வைக்கும் ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பாளரும் ராணுவ நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி அளிக்க வேண்டும் என்று ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.