சமூக ஊடகம் என்பது ரசிகர்களுடனும் பிரபலங்களுடனும் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு தளமாகும். ஆனால் சில நேரங்களில் ரசிகர்களுக்கான போர்க்களமாகவும் இந்த தளங்கள் மாறும். பிரபல தென்னிந்திய நடிகர் தளபதி விஜய்க்கு (Vijay) பெரும் ரசிகர்கள் உள்ளனர், மற்றும் அவரது கடைசி ஆண்டு போஸ்ட், அவர் பிகில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டபோது, 2019 ஆம் ஆண்டில் ட்விட்டரில் இந்திய பொழுதுபோக்கு துறையில் இருந்து மிகவும் மறு ட்வீட் (retweet) செய்யப்பட்ட போஸ்ட் ஆக மாறியது. 'பிகில்' (Bigil) ஃபர்ஸ்ட் லுக்கிற்குப் பிறகு, ரசிகர்களுடனான விஜய்யின் மாஸ் செல்பி மிகவும் ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்ட் ஆக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாஸ் செல்பி பற்றி பேசுகையில்., தளபதி விஜய்க்கு (Vijay) பஸ்ஸின் மேல் ஏறி ஏராளமான ரசிகர்களுடன் மறக்கமுடியாத செல்பி எடுத்தார். பின்னர், நடிகர் தளபதி விஜய்க்கு (Vijay) தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்தபோது அதிகளவில் அந்த புகைப்படம் வைரலானது. 


 


ALSO READ | லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்..."எவனென்று நினைத்தாய்"....


தற்போது, விஜய்யின் அந்த ட்வீட் இந்தியாவில் அதிக மறு ட்வீட் (retweet) செய்யப்பட்ட போஸ்ட் ஆக மாறியுள்ளது, மேலும் விஜய் ட்விட்டர் தரவரிசையில் 2020 இல் முதலிடம் வகிக்கிறார். இந்த சாதனையை அவரது ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர், மேலும் விஜய் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி உள்ளது.


 



 


 



 


 


நடிகர் விஜய் 'மாஸ்டர்' படத்துடன் ராக் செய்யத் தயாராக உள்ளார், மேலும் படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா எரேமியா, மாலவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 

Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR 


 


ALSO READ | லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் இணையும் புது படம்....டைட்டில் இதுவா?